Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


புடலங்காய் வறுவல்

Go down

புடலங்காய் வறுவல்

Post by oviya on Fri Dec 18, 2015 9:35 am

தேவையானப்பொருட்கள்:

புடலங்காய் - 1
பொட்டுக்கடலை பொடி அல்லது கடலை மாவு - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
வெள்ளை எள் - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
எலுமிச்சம் பழச்சாறு - ஓரிரு துளிகள்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

புடலங்காயின் விதை, மற்றும் உள்ளே இருக்கும் வெள்ளையான நாரை நீக்கி விட்டு, நீள வாக்கில், கீழ்கண்ட படத்தில் உள்ளது போல் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
 

நீள புடலங்காயானால் ஒன்று போதும், குட்டையான காயானால் 2 உபயோகிக்கவும்.

நறுக்கிய காயில் சிறிது உப்பைத் தூவி, பிசறி 10 முதல் 15 நிமிடங்கள் ஊற விடவும்.  பின்னர் காயை நன்றாகப் பிழிந்து விட்டு ஒரு பாத்திரத்தில் போடவும்.  அத்துடன் பொட்டுக்கடலை பொடி அல்லது கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், வெள்ளை எள், பெருங்காயத்தூள, கறிவேப்பிலை  (பொடியாக நறுக்கி சேர்க்கவும்), எலுமிச்சம் பழச்சாறு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பிசறி விடவும்.  அதன் மேல் ஒரு கை தண்ணீரைத் தெளித்து, எல்லா மாவும் காயில் நன்றாக ஒட்டும் படி பிசறி வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணையை காய வைத்து, ஒரு கை காயை எடுத்து உதிரியாக எண்ணையில் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.  எல்லாவற்றையும் இப்படியே பொரித்தெடுக்கவும்.

கடைசியில், ஒரு கொத்து கறிவேப்பிலையை எண்ணையில் போட்டு பொரித்தெடுத்து, வறுத்து வைத்துள்ள காயின் மேல் தூவினால் போல் போட்டால் பார்க்க நன்றாக இருக்கும்.

சாம்பார் சாதம் / ரசம் சாதம் / கலந்த சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum