Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


மாம்பழ அல்வா

Go down

மாம்பழ அல்வா

Post by oviya on Fri Dec 18, 2015 9:05 am

தேவையானப்பொருட்கள்:

நன்கு கனிந்த மாம்பழம் - 1
ரவா - 3/4 கப்
சர்க்கரை - 3/4 கப்
நெய் - 1/2 கப்
முந்திரிப்பருப்பு - சிறிது
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

மாம்பழத்தோலைச் சீவி விட்டு, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டி எடுத்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும். அரைத்த விழுது ஒன்று அல்லது ஒன்றரை கப் அளவிற்கு இருக்க வேண்டும். மேற்கூறிய பொருட்கள், ஒன்றரைக் கப் மாம்பழ விழுதிற்கு ஏற்றது. விழுது குறைவாகவோ, அல்லது கூடுதலாகவோ இருந்தால், இதரப் பொருட்களை அதற்கு தகுந்தாற்போல் சேர்க்கவும்.

ஒரு வாணலியில் ரவாவைப் போட்டு இலேசாக வறுத்து (நிறம் மாறக்கூடாது. தொட்டால் சற்று சுட வேண்டும்) ஆற விட்டு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும். சர்க்கரையயும் நன்றாக பொடித்துக் கொள்ளவும்.

அடி கனமான வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, அதில் முந்திரிப்பருப்பை வறுத்தெடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும். அதே வாணலியில், அரைத்த மாம்பழ விழுதைப் போட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து, ஓரிரு நிமிடங்கள் வதக்கவும். பின்னர் அதில் பொடித்த ரவாவையும், சர்க்கரையையும் போட்டு, நன்றாகக் கிளறவும். நெய்யை சிறிது சிறிதாக விட்டு, கெட்டியாகும் வரை கைவிடாமல் கிளறவும். அல்வா வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும் பொழுது, அதில் வறுத்த முந்திரிப்பருப்பையும், ஏலக்காய் தூளையும் சேர்த்துக் கிளறி, ஒரு நெய் தடவியத் தட்டில் கொட்டி சமமாகப் பரப்பி விடவும்.

ஆறியவுடன், சதுரமாகவோ அல்லது விரும்பிய வடிவத்திலோ துண்டுகள் போடவும்.

அல்லது அப்படியே நெய் தடவியக் கிண்ணத்தில் கொட்டி பரிமாறலாம்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum