Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


மண்! உயிர் வாழ்வதற்கான திடமான தளம்: வடக்கு முதல்வர் உரை

Go down

மண்! உயிர் வாழ்வதற்கான திடமான தளம்: வடக்கு முதல்வர் உரை

Post by oviya on Sat Dec 05, 2015 1:15 pm

மண்ணாட்சி என்பது நாடுகளாலும் அரசுகளாலும் பயன்படுத்தப்படும் கொள்கைகள், தந்திரோபாயங்கள், தீர்மானங்கள் எடுப்பதற்கான செயல்முறைகள் என வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
உலக மண் தினமான இன்று காலை 9.30 மணிக்கு யாழ் கிறீன் க்றாஸ் விடுதியில் ஆரம்பாமான “மண் - உயிர் வாழ்வதற்கான திடமான தளம் கருத்தமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முதலமைச்சரின் முழு உரையும் பின்வருமாறு,

சர்வதேச மண் தினமாகிய டிசெம்பர் 5ந் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 68வது அமர்விலேயே 2013ம் ஆண்டு 20ந் திகதியன்று பிரகடனப்படுத்தப்பட்டது. 2015ம் ஆண்டு தொடக்கமே அது நடைமுறைக்கு வருகின்றது.

இவ்வாறு பிரகடனப்படுத்துவதற்கான காரணம் உணவுப் பாதுகாப்பு, விவசாயம், தட்ப வெட்ப நிலைமாற்றம், வறுமை ஒழித்தல், நிரந்தர அபிவிருத்தி ஆகியனவற்றுக்கு மண்ணானது எத்துனை அவசியம் என்ற கருத்தை உலகளாவிய ரீதியில் மக்களிடையே பரப்பவேயாகும்.

குறிப்பிட்ட தன்மையில் அமைந்த நிலப்பரப்பையே மண் என்கின்றோம். வண்டல் மண், கரிசல்மண், களிமண் என்று மண் பலவகைப்படும். மண் சம்பந்தமாக மண்ணாட்சி, மண்முகாமைத்துவம் என்ற இது பதங்கள் பாவிக்கப்பட்டுள்ளதை அவதானிக்கின்றேன்.

மண்ணாட்சி அல்லது Soil Governance என்பது நாடுகளாலும் அரசுகளாலும் பயன்படுத்தப்படும் கொள்கைகள், தந்திரோபாயங்கள், தீர்மானங்கள் எடுப்பதற்கான செயல்முறைகள் போன்றன ஆகும்.

உலகளாவிய ரீதியில் இது விவசாயத் தொலைத் தோற்றத்தை மையமாக வைத்தே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

ஏனென்றால் உணவுப் பாதுகாப்பானது இன்று உலகளாவிய ரீதியில் மிக முக்கியமானதொரு விடயமாக மாறியிருப்பதே அதற்குக் காரணம். அதனால்த்தான் இவ்வாறு விவசாயத்துடன் இணைந்ததாக வரையறைப் படுத்தப்பட்டு வருகின்றது.

FAO என்ற உணவு விவசாய நிறுவனந்தான் GSP அல்லது Global Soil Partnership என்ற உலகளாவிய மண் பங்குடைமை என்ற கருத்தை முன்வைத்து உலக ரீதியாகக் கிடைக்கும் வரையறைக்குட்பட்ட மண் வளங்களை ஆரோக்கியமான விளைவு மிகுந்த மண்ணாக உணவுப் பாதுகாப்புக் கருதியும் மற்றைய சூழல் பாதுகாப்பு கருதியும் அவற்றை உறுதி செய்யும் விதத்தில் மாற்றும்படிக்கு ஆட்சி செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளது.

மண்ணை ஆட்சி செய்வதானால் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் அரசாங்கங்களுக்கிடையிலும் உள்ளூராட்சி அதிகார மையங்களிடையேயும் கைத்தொழில் உயர் மட்டத்திலும், குடிமக்கள் இடையேயும் ஒத்துழைப்பும் புரிந்துணர்வும் ஏற்பட வேண்டும்.

அப்பொழுதுதான் உரிய செயல்முறைகளையும், ஒழுங்குமுறைகளையும் நடைமுறைப்படுத்தும் விதத்தில் கொள்கைகளை உள்வாங்கி மண் பாவிப்பை உரிய முறையில் ஆற்றுப் படுத்தலாம்.

அவ்வாறு ஆற்றுப் படுத்தும் போது பாவனையாளர்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தாமல் நிலையான மண் முகாமைத்துவத்தை உறுதி செய்வது அவசியம்.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் மண்ணாட்சி என்பது நிலையான விவசாயத்தை மேம்படுத்தி உணவுப் பாதுகாப்பை உறுதிப் படுத்தல்தான் அது என்று அர்த்தப்படுத்தப்பட்டு வருகின்றது.

மண் முகாமைத்துவம் என்பதை அடுத்து ஆராய்ந்து பார்ப்போம். மண்ணை வளப்படுத்த, மண்ணின் அமைப்பை உறுதிசெய்ய, உயிர்ப்பான மண்ணை மீட்டெடுக்க எவ்வாறான பழக்க வழக்கங்களில் ஈடுபட வேண்டும்,

எவ்வெந்த வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே மண் முகாமைத்துவமாகும். மண்ணிலிருந்து கரிமத்தைத் தனித்தெடுத்தலும் இதனுள் அடங்கும்.

மண் முகாமைத்துவ வழிமுறைகள் விவசாயத்தில் அதிகளவில் பாவிக்கப் படுகின்றன. இதற்குக் காரணம் உழுதலுக்குப் பாவிக்கப்படும் தொழில்நுட்பங்கள், பசளைப் பாவனை வழிமுறைகள்,

பயிர் சுழற்சி முறைகள் போன்ற பலதையும் கட்டுப்படுத்தி ஒழுங்குக்கு உட்படுத்த வேண்டிய கடப்பாடு stakeholders எனப்படும் பணையப் பொருளாளர் அனைவருக்கும் இருக்கின்றது. எனவேதான் மண் முகாமைத்துவம் முக்கியத்துவம் அடைந்துள்ளது.

இன்று மண்பாவனையில் மாற்றங்கள், குடிசனப் பெருக்கம், தட்பவெட்ப நிலைமாற்றத்தால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கள் போன்ற பல காரணங்களினால் உலகளாவிய ரீதியில் மண்ணில் தரக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதை ளுழடை னநபசயனயவழைn என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள்.

இது படிப்படியாக காலத்தின் கோலமாக ஏற்படும் ஒரு நிலையாகும்.

மண்ணின் தரமும் பண்பும் காலஞ் செல்லச் செல்ல பல காரணங்களின் நிமித்தம் குறைந்து கொண்டு போவதையே இச்சொற்றொடர் உணர்த்துகின்றது.

மண்தான் உணவு உற்பத்திக்கு ஆதாரமாக இருந்து வருகின்றது. ஆதலால் உணவு சார்ந்து பார்க்கும் போது மண்ணின் தரக் குறைவு எப்பேர்ப்பட்ட தாக்கங்களை உற்பத்தியில் ஏற்படுத்துகின்றன என்ற கருத்தே மண்ணாட்சியில் முதன்மைத்துவம் பெற்றுள்ளது.

அதே நேரம் தட்ப வெட்ப நிலை மாற்றமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதாவது கரிமமானது அளவுக்கதிகமாக வெளிப்படுத்தப்படும் போது உலகளாவிய தட்ப வெட்ப நிலையும் மாற்றமடைகின்றது.

உலகளாவிய ரீதியில் வெட்பநிலை கூடுகின்றது. அது மண்ணையும் பாதிக்கின்றது. நிலம் கரம்பு நிலமாக மாறுகின்றது. (uncultivated land– தரிசுநிலம்) உப்புத்தன்மை மண்ணில் கூடுகின்றது.

தாவர, விலங்கு வகைகளின் நடமாட்டம் குறைகின்றது. இவை மண்ணின் வளத்தைக் குறைக்கின்றன. ஆகவே மண்ணின் வளத்தை மேம்படுத்துவது எவ்வாறு, பாலைவனமாக நிலங்கள் மாற்றமடைவதை நிறுத்துவது எவ்வாறு,

மண்ணை ஆட்சி செய்து முகாமைத்துவஞ் செய்ய என்ன வழிமுறைகளைக் கடைப் பிடிக்க வேண்டும் போன்ற பல விடயங்களும் முக்கியமாக விவசாய மட்டத்தில் ஆர்வத்துடன் ஆராயப்பட்டு வரும் விடயங்களாக மாறியுள்ளன.

இதற்கான தீர்வாக மண் வளங்களை சிதைவுறாது பாதுகாப்பது, அவற்றின் தரத்தை உயர்த்துதல், மண் வளங்களைப் பயன்தரும் நிலையான பாவிப்பால் பழைய நிலைக்குக் கொண்டுவரல் போன்ற பல வழிமுறைகளும் ஆராய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.

இவை இடத்துக்கிடம், நாட்டுக்கு நாடு வித்தியாசப் படுகின்றன. எமது வடமாகாண சூழலுக்கு ஏற்ற விதத்தில் எவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்தி உயிர் வாழ்வதற்கு ஏற்ற திடமான தளமாக எமது மண்ணை மாற்றியமைக்கலாம் என்பதே இன்றைய கருத்தமர்வின் குறிக்கோளாகும்.

பல முக்கியமான விடயங்கள் ஆராயப்படவிருப்பதை நான் அவதானிக்கின்றேன். வளலாளர்களின் பேச்சுக்களின் தலைப்புக்கள் ஓரளவு எவ்வெவற்றை நீங்கள் ஆராயப் போகின்றீர்கள் என்பதை எடுத்துக் காட்டுகின்றன.

விவசாய பீடத்தின் விவசாய இராசாயனத்துறையின் தலைவர் “உயிர்ப்பான மண் - பேண்தகு விவசாயத்தின் ஆன்மா” என்ற பொருள் பற்றிப் பேசப் போகின்றார் என்று காண்கின்றேன்.

எவ்வாறு விவசாயத்தின் ஜீவ நாடியாக மண் அமைந்துள்ளது என்பது பற்றி மட்டுமல்லாது அம்மண் உயிர்ப்பான மண்ணாக அமைந்திருக்க வேண்டும் என்ற கருத்தை அவர் முன்வைக்கவுள்ளார் என்று நம்புகின்றேன்.

அடுத்து மண்ணை மீட்டெடுத்தால்த்தான் மண்ணின் உயிர்மையை நிலைபேறாக்கலாம் என்ற கருத்து உங்கள் முன் வைக்கப்பட இருக்கின்றது. உயிர் வாழ்வதற்கான திடமான தளமாக இலங்கையின் மண் அமைய வேண்டிய அவசியம் அடுத்து ஆராயப் படவிருக்கின்றது.

மதிய அமர்வில் மிக முக்கியமான ஒரு விடயம் ஆராயப்படவிருக்கின்றது.அதாவது விவசாய நடவடிக்கைகளால் மண்வளம் குன்றி வருவதையும் அவ்வாறான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி மண்வளத்தை மேம்படுத்த எப்பேர்ப்பட்ட அணுகுமுறைகளில் நாங்கள் ஈடுபட வேண்டும் என்று விவசாய ஆராய்ச்சி நிலைய உதவி விவசாயப் பணிப்பாளர் ஆராய இருக்கின்றார்.

அண்மையில் நாங்கள் நீரில் எண்ணை கலந்திருக்கின்றது என்று ஆராயப் புகுந்த போது மிகப் பாரதூரமான பாதிப்பை உண்டுபண்ணக் கூடிய பதார்த்தமொன்று அளவுக்கதிகமாக நீரில் கலந்திருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

நைட்ரேட்டின் செறிவு நீரில் கூடியிருந்தமை காணப்பட்டது. தீவிர செயற்கை உரப் பாவனை, கிருமி நாசினிகளின் பாவனை ஆகியன மண்ணையும் நீரையும் பாதித்து வருவதைக் காணக் கூடியதாக இருந்தது.

மண்வளம் குன்றலும் நீரின் சீர்மை பாதிப்படைவதும் பாரிய ஒரு பிரச்சனையாக மாறியிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. ஆகவே விவசாய நடவடிக்கைகளால் மண்வளம் குன்றலைக் குறைப்பதற்கான அணுகு முறைகளை ஆராய்வது மிக முக்கியமானதொரு பயிற்சியாக அமைகின்றது.

கடைசியாக யாழ் பல்கலைக் கழக பட்டப்பின் கற்கை நெறிகள் பீடத்தின் பீடாதிபதி மண்ணை வளப்படுத்துவதில் நுண்ணங்கிகளின் வகிபாகத்தை ஆராயவிருக்கின்றார்.

எல்லா வளவாளர்களும் இன்றைய கருத்தமர்வில் தவறாது பங்கு பற்றி தத்தமது கருப்பொருட்களைப் பற்றிப் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.

உங்களுடன் கருத்தமர்வில் கலந்து கொள்ள ஆர்வம் இருந்தாலும் நேர காலத்தையும் பொறுப்புக்களையும் முகாமைத்துவப் படுத்த வேண்டிய கடப்பாடு உடையவனாக நான் உள்ளேன்.

அரசியலானது என்னை நுனிப்புல் மேயும் ஆடாக மாற்றி விட்டுள்ளது. எதையும் ஆரஅமரச் சிந்தித்து ஆராய்ந்து அறிவை மேம்படுத்தக் கூடிய ஒரு அவகாசத்தை என்னிடம் இருந்து பறித்தெடுத்து விட்டது.

ஆகவே அவகாசம் இருக்கும் போது ஆராய்ந்து பார்க்க இன்றைய வளலாளர்களின் பேச்சுக்களின் சாராம்சங்களை அல்லது பேச்சாவணங்களை எனக்கனுப்புமாறு அமைச்சரிடம் வேண்டிக் கொள்கின்றேன் என்றார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum