Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


நாட்டின் சமச்சீரான அபிவிருத்தியை எடுத்துக்காட்டக்கூடிய வரவு-செலவுத்திட்டம்!- கபீர் ஹாசிம்

Go down

நாட்டின் சமச்சீரான அபிவிருத்தியை எடுத்துக்காட்டக்கூடிய வரவு-செலவுத்திட்டம்!- கபீர் ஹாசிம்

Post by oviya on Sat Nov 21, 2015 2:04 pm

இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டமானது நாட்டின் சமச்சீரான அபிவிருத்தியை எடுத்துக்காட்டக்கூடிய வரவுசெலவுத் திட்டமாகும் என நெடுஞ்சாலைகள், உயர் கல்வி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்
பாராளுமன்றத்தில் இன்று (21) நடைபெற்ற வரவுசெலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இவ்வரவு செலவுத்திட்டமானது நாடு செல்கின்ற திசைக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. வளங்களுக்கான பகிர்ந்தளிப்புக்கள் அதிகம். வருமானங்கள் அவற்றுக்கான வரிவிதிப்பு பற்றி நோக்கினால் நாம் எங்கே நிற்கின்றோமோ அங்கே இருந்து ஆரம்பித்துள்ளோம்.

மற்றும் தற்போது பரவலாக காணப்படுகின்ற இளைஞர் தொழிலின்மை, கீழ் உழைப்பு ஆகியவற்றிற்கு தீர்வாக அமைந்துள்ளது. தற்போது 100 க்கு 21 சதவீதமான இளைஞர்கள் வேலையின்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அவர்களுக்கானன தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்ககூடியதாக இவ்வரவு செலவுத்திட்டம் அமைந்துள்ளது.

அத்துடன் முடிந்தளவு வரை அரசாங்க சேவைகளுக்கு அவர்களை இணைத்து கொள்ள முடியும். ஏனையோர்களை தனியார் சேவையில் ஈடுபடுத்த முடியும். தனியார் துறையினருக்கு ஓய்வூதிய திட்டம் வழங்க மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டத்தின் மூலம் இது சாத்தியமாகுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum