Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


நீரில் மூழ்கும் வடமாகாணம்! மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

Go down

நீரில் மூழ்கும் வடமாகாணம்! மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

Post by oviya on Sat Nov 14, 2015 12:16 pm

வடமாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழையின் காரணமாக பல பகுதிகளில் வெள்ள நிலை ஏற்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் சில பிரதேசங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அந்தப் பகுதியில் மீட்புப் பணிகளும் இடம்பெற்று வருவதாக அனர்த்த முகாமைத்து நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்தின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதோடு எளுவன்குளத்தின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு திருகோணமலை மாவட்டங்களின் தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதோடு குறுக்கு வீதிகளின் ஊடாக போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக சாந்தபுரம் மற்றும் பொன்னகர் பகுதிகளில் மழை வெள்ளத்தினால் 60 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுனதாஸ் தெரிவித்துள்ளார்.

சாந்தபுரம் பகுதியில் மழையுடன் வீசிய கடும் காற்று காரணமாக சுமார் 50 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இவற்றுள் 18 வீடுகள் முழுமையாகவும், 32 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

இந்த வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதுதவிர பொன்னகர் பகுதியிலும் 12 குடும்பங்கள் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு முறிகண்டி வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சில இடங்களில் 3 அடி உயரத்திற்கு வௌ்ளம் தேங்கியுள்ளதாகவும், அந்த பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இடர் முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுனதாஸ் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளை மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு மேற்கொண்டு வருகின்றது.

அதிகமழை காரணமாக இராஜாங்கனை, தப்போவ, தெதுருஓயா, உடவளவ ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதோடு அவற்றின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்து நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்தம் தொடர்பான தகவல்களை 117 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிந்து கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum