Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


அவன்கார்ட் சம்பவத்தில் சட்டம் எங்கு மீறப்பட்டுள்ளது!- அனுரகுமாரவிடம் கேள்வி எழுப்பும் கம்மன்பில

Go down

அவன்கார்ட் சம்பவத்தில் சட்டம் எங்கு மீறப்பட்டுள்ளது!- அனுரகுமாரவிடம் கேள்வி எழுப்பும் கம்மன்பில Empty அவன்கார்ட் சம்பவத்தில் சட்டம் எங்கு மீறப்பட்டுள்ளது!- அனுரகுமாரவிடம் கேள்வி எழுப்பும் கம்மன்பில

Post by oviya on Wed Nov 11, 2015 1:54 pm

அவன்கார்ட் சம்பவம் தொடர்பான விடயத்தில் சட்டம் மீறப்பட்டுள்ளதாக கூறும் சட்டம் தொடர்பான பேராசிரியர் அனுகுமார திஸாநாயக்க, எங்கு சட்டம் மீறப்பட்டுள்ளது என்பதை கூறவேண்டும் என தான் மீண்டும் கேள்வி எழுப்புவதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அவன்கார்ட் குறித்த விவாதத்திற்கு வருமாறு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, அனுரகுமார திஸாநாயக்கவுக்கு சவால் விடுத்துள்ளார். அந்த சவாலை அனுரகுமார திஸாநாயக்க இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.

காது கேளாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாகவா அனுரகுமார இந்த சவாலை ஏற்கவில்லை எனக் கேள்வி எழுப்புகிறேன் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமது அணியினர் உணமையான எதிர்க்கட்சியாக செயற்பட்டு வருவதால், எதிர்க்கட்சித் தலைவராக தினேஷ் குணவர்தனவையும் பிரதான அமைப்பாளராக டளஸ் அழகபெருமவையும் ஒருங்கிணைப்பாளராக பிரசன்ன ரணதுங்கவையும் நியமித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, அவன்கார்ட் சம்பவம் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் வெளிப்படையாகவே மோதல்கள் வெடித்துள்ளதாக கூறியுள்ளார்.

அத்துடன் அந்த கட்சிக்குள் பிரதமரின் செயற்பாடுகளுக்கு எதிராகவும் போராட்டம் வெடித்துள்ளது. அவன்கார்ட் பிரச்சினை காரணமாக மத்தியவங்கியின் முறிபத்திர முறைகேடு கீழடிப்புச் செய்யப்பட்டுள்ளது.

அலரி மாளிகையில் 5 ஆயிரம் ரூபா நாணயத்தாள் தொகை இருப்பதாக கூறிய அமைச்சர் மங்கள சமரவீர அது எங்கிருக்கின்றது என்பதை கூற வேண்டும்.

ஜனவரி 8ம் திகதி அலரி மாளிகையில் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக கூறி புலனாய்வுப் பிரிவுக்கு சென்ற மங்கள சமரவீர, அந்த விசாரணைகளுக்கு என்ன நடந்தது என்பதை கூறவேண்டும் எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum