Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றியும் விசாரிக்கப்பட வேண்டும்! தேசிய சமாதானப் பேரவை

Go down

வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றியும் விசாரிக்கப்பட வேண்டும்! தேசிய சமாதானப் பேரவை

Post by oviya on Wed Oct 28, 2015 1:19 pm

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டதையும் ஐநா விசாரிக்க வேண்டும் என தேசிய சமாதானப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
வடமாகாண முஸ்லிம்களின் 25வது வருட வெளியேற்றத்தையிட்டு தேசிய சமாதானப் பேரவை வெளியிட்டுள்ள விஷேட அறிக்கையிலேயே இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

2015 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 30 ஆம் திகதியுடன் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னிப் பெரு நிலப்பரப்பில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமது கால் நூற்றாண்டு அகதி வாழ்க்கையை நிறைவு செய்கின்றார்கள்.

தேசிய சமாதானப் பேரவையின் அறிக்கையில் மேலும் விவரிக்கப்பட்டுள்ளதாவது,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கை 2002 ஆண்டு முதல் 2009 வரையான காலத்தை மட்டுப்படுத்தியிருக்கின்றது.

ஆனாலும், இந்தக் காலப்பகுதியோடு மாத்திரம் அதன் விசாரணைகள் நின்று விடாது 1990 ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் வாழ்ந்த சுமார் 90 ஆயிரம் முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றியும் யுத்தத்தின் காரணமாக இடம்பெற்ற இன்னும் பல தீவிர மனித உரிமை மீறல்கள் பற்றியும் பின்னோக்கி விசாரிக்கப்பட வேண்டும் என தேசிய சமாதானப் பேரவை கருதுகின்றது.

இந்த ஒக்டோபர் மாதத்துடன் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் ஒட்டுமொத்தமாக வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட 25 வது ஆண்டு நிறைவடைகிறது.

90,000 வலுவான வடக்கு முஸ்லிம் மக்கள் வெளியேற்றும் தேசிய அளவில் ஒரு மனிதாபிமான மற்றும் அரசியல் பிரச்சினையாகத் தொடர்ந்த வண்ணமுள்ளது.

வெளியேற்றப்பட்டவர்களில் 80 சதவீதமானோர் தங்களது பூர்வீக வாழ்விடங்களுக்கு வெளியே தொடர்ந்தும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

எனினும், இலங்கை மக்களில் ஒரு பிரிவினராகிய இவர்கள் எதிர்நோக்கும் இந்தப் பிரச்சினைக்கு பொதுக் கவனம் அல்லது முன்னுரிமை கொடுக்கப்பட்டு ஒரு நீதியான தீர்வு இதுவரைக் கிட்டவில்லை.

இலங்கையில் நல்லிணக்க, பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானம் இலங்கை ஏற்கொண்ட இணை ஆதரவாளரைக் கொண்ட அரசாங்கத்தின் முடிவு நாட்டின் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகின்றது.

இன்று கூட, ஆறு ஆண்டுகள் போர் முடிவுக்கு வந்த பிறகும் 1990 ஆம் ஆண்டு ஒரு பெரும் தொகையினராக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் தற்காலிக வதிவிடங்களில் வாழ்ந்து கொண்டிருப்பது நாட்டில் நீதி மற்றும் நல்லிணக்க செயல்முறையிலுள்ள ஒரு குறைபாடாகவும் குற்றச்சாட்டாகவும் உள்ளது.

இது, இலங்கை கைச்சாத்திட்டுள்ள சர்வதேச உடன்படிக்கைகளின் மூலம் அவர்களுக்கு வழங்கப்பட்ட தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்கு அவர்களுக்குள்ள உரிமையை, மீறியுள்ளது.

இடைக்கால மீளக்குடியமர்விற்கு வழிவகுத்து திரும்ப தங்கள் உரிமையை நிரூபிக்க தம்மால் முடியாதிருப்பதையும் சொந்த சமூகத்திற்குள்ளேயே அழுத்தங்களை அதிகரித்துள்ளதோடு ஆட்சிக்கு வந்த வெற்றிகரமான அரசாங்கங்கள் வினைத்திறனின்மையை காட்டி நிற்கின்றது.

இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் சமீபத்திய மீள்குடியேற்றம் வில்பத்து தேசிய பூங்கா அத்து மீறல் என்று சர்ச்சைக்குரிய அத்துமீறலாகக் காட்டப்பட்டுள்ளது.

உண்மை நல்லிணக்க ஆணைக்குழு (TRC), சர்வதேச பங்கு கொண்டு பொறுப்புக்கூறும் ஒரு நீதி பொறிமுறை மற்றும் இழப்பீட்டுக்கான ஒரு அலுவலகம் நிறுவ வேண்டும் என்ற அரசாங்கத்தின் முடிவு சர்வதேச தரத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று ஒரு நீதியான தீர்வு அடிப்படையை வழங்குகிறது.

இது வெளியேற்றப்பட்டு தொடர்ந்து இயலாமையிலுள்ள முஸ்லிம்கள் தங்கள் உரிமையை நடைமுறையில் கொண்டு வருவதற்கும் தங்கள் சொந்த இடத்திற்குத் திரும்புதற்கும் ஒரு பிரயோகத்தை அளிக்கிறது.

தேசிய சமாதானப் பேரவையின் டி.ஆர்.சி. ஆணை ஐ.நா. மனித உரிமைகள் சபையின் விசாரணை அறிக்கை 2002 - 09 வரை மட்டுப்படுத்தப்பட்ட காலமாக இருப்பதால் அதற்கு முன்னுள்ள காலப்பகுதியும் விசாரணைக்காக சேர்க்கப்பட வேண்டும் என்று கேட்டிருக்கின்றது.

1990 ல் வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட நிகழ்வுகள் உட்பட யுத்தத்தின் காரணமாக நிகழ்ந்த மற்ற தீவிர மனித உரிமை மீறல்கள் பற்றியும் பின்னோக்கி விசாரிக்கப்பட வேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை கேட்டிருக்கின்றது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum