Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


குமரன் பத்மநாதனுக்கு வெளிநாடு செல்வதற்கு தடை! - தகவல்கள் அடங்கிய அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிப்பு

Go down

குமரன் பத்மநாதனுக்கு வெளிநாடு செல்வதற்கு தடை! - தகவல்கள் அடங்கிய அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிப்பு

Post by oviya on Wed Oct 28, 2015 1:16 pm

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுத விநியோகஸ்தராக இருந்த கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு வெளிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் 13ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கே.பிக்கு எதராக சட்டத்தை செயற்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரதினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவரான குமரன் பதமனாதன் எனப்படும் கே.பீ. தொடர்பில் 4 அறிக்கைகளை சட்டமா அதிபர் நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜயந்த ஜயசூரிய நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த அறிக்கையை ஆய்வு செய்ததன் பின்னர் மனுதாரர்களின் கருத்தினை அறிந்துகொள்வதற்காக எதிர்வரும் 12ஆம் திகதி மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக உத்தரவிடப்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு

கே.பியின் தகவல்கள் அடங்கிய அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிப்பு

விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பிரிவு தலைவர் கே.பி என்ற குமரன் பத்மநாதன் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையை சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

சட்டமா அதிபர் சார்பில் அரசாங்கத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜயநாத் ஜயசூரிய இதனை நீதிமன்றத்தில் அறிவித்தார்.

கே.பியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கோரி மக்கள் விடுதலை முன்னணி தாக்கல் செய்திருந்த மனுமீதான விசாரணை இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

எவ்வாறாயினும் சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் பிரதி இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என மனுதார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் விஜித் மலல்கொட அன்றைய தினத்திற்கு முன்னர் அறிக்கையின் பிரதியை வழங்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டார்.

மேலும் தான் ராஜபக்சவினரிடம் அமெரிக்க டொலர்களில் பணத்தை பெற்றுக்கொண்டு வழக்கு தீர்ப்புகளை வழங்குவதாக இணையத்தளம் ஒன்று சுமத்திய குற்றச்சாட்டை நிராகரிப்பதாக இதன் போது நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அந்த குற்றச்சாட்டு பொய்யானது என்றும் நீதியரசர் கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum