Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


மகிந்த ராஜபக்சவுக்கு முதுகெலும்பு இல்லையாம்: ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார

Go down

மகிந்த ராஜபக்சவுக்கு முதுகெலும்பு இல்லையாம்: ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார

Post by oviya on Sun Oct 25, 2015 2:11 pm

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஜெனிவா யோசனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் கலந்து கொள்ளாது வேண்டும் என்றே ஏன் நழுவிச் சென்றார் என்பதை உடனடியாக நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
ஜெனிவா யோசனை இலங்கைக்கு சாதகமான ஒன்று என இலங்கைக்கு எதிராக தொடர்ந்து செயற்படும் தரப்பினரே ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ஊடக அறிக்கையை வெளியிட்டு, ஜெனிவா யோசனை நாட்டுக்கு பாதிப்பானது எனக் கூறும் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தும் ஏன் தனது நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் கூறவில்லை எனவும் ரங்கே பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.

புத்தளம் மதுரங்குளி பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரச் சபைக் கூட்டத்தில் பேசும் போதே ராஜாங்க அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

1989 ஆம் 90ஆம் ஆண்டுகளில் இலங்கை படையினர் போர் குற்றங்களை செய்தனர் என்று ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் முதலில் முறைப்பாடு செய்த பெருமை மகிந்த ராஜபக்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோரையே சாரும்.

மகிந்த ராஜபக்ச உண்மையான தேசப்பற்றாளர் என்றால், நாடாளுமன்ற விவாதத்தில் அச்சமின்றி கலந்து கொண்டிருக்க வேண்டும்.

சட்ட ஆலோசனைகளை பெறவே வெளிநாட்டு நிபுணர்களை வரவழைத்ததாக மகிந்த ராஜபக்ச கூறுகிறார்.

நாட்டின் மிகப் பெரிய தேசப்பற்றாளரான மகிந்த ஏன் வெளிநாட்டு நிபுணர்களிடம் சட்ட ஆலோசனை பெற்றார்?. எமது நாட்டின் சட்ட நிபுணர்கள் சிறந்தவர்களாக இருக்கவில்லையோ?.

அந்த ஆலோசனைகளால் நாட்டுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டதா?. அந்த ஆலோசனைகளுக்காக யாருக்கு தெரியாமல் மத்திய வங்கி ஊடாக ஆயிரக்கணக்கான டொலர்களை ஏன் செலுத்தினீர்கள்?.

படையினரை பாதுகாக்கவா, குடும்பத்தினரை பாதுகாக்கவா ஆலோசனை பெறப்பட்டது?. ஏன் இது குறித்து நாடாளுமன்றத்திற்கு தெளிவுப்படுத்தப்படவில்லை?.

தற்போது பெரிய தேசப்பற்றாளர்கள் போல் பேசும் வாசுதேவவும் மகிந்தவும் எமது நாட்டின் பிரச்சினைக்கு சர்வதேச தலையீடு அவசியம் எனக் கூறி 89 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஜெனிவா சென்றனர்.

89 ஆம் ஆண்டு வன்முறை காலத்தில் கொல்லப்பட்ட இளைஞர்களின் புகைப்படங்களை இவர்களே மனித உரிமை ஆணைக்குழுவிற்கு எடுத்துச் சென்றனர்.

மகிந்த ராஜபக்ச எமது நாட்டிற்குள் சர்வதேச தலையீடு அவசியம் எனக் கூறி ஜனாதிபதி பிரேமதாசவுக்கு எதிராக முறைப்பாடு செய்த போது சிலருக்கு பெரிய தேசப்பற்றாளராக தென்பட்டார்.

அப்படியான தேசப்பற்றாளரான மகிந்தவுக்கு முதுகெலும்பு இருந்தால், நாடாளுமன்றத்திற்கு வந்து ஜெனிவா யோசனை தொடர்பான விவாதத்தை எதிர்கொண்டிருப்பார்.

ஆடை அணிந்து கொண்டு அது குறித்து பேச முடியாது என்பதை அறிந்து கொண்டதால் அவர் வரவில்லை எனவும் ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum