Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


யாழ். நீதிமன்ற தாக்குதல் சம்பவம்: 8 பேருக்கு பிணை

Go down

யாழ். நீதிமன்ற தாக்குதல் சம்பவம்: 8 பேருக்கு பிணை

Post by oviya on Tue Oct 20, 2015 2:53 pm

யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதியின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 8 பேரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியள்ளது.
5 இலட்சம் ரூபாய் பெறுமதியான தலா ஐந்து ஆட்பிணையில் செல்வதற்கு ஒவ்வொருவரும் நீதவான் அனுமதியளித்தார்.

கடந்த வழக்குத் தவணையில் 16 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 8 பேர், மேல் நீதிமன்றத்தின் மூலம் பிணை கோரி விண்ணப்பம் செய்ததுடன் மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டது.

இந்நிலையில், மிகுதி 8 பேருடைய வழக்கு, இன்று நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, 8 பேரையும் பிணையில் செல்ல நீதவான் அனுமதியளித்தார்.

இந்த வழக்கை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 8ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum