Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


மகிந்தவைக் காப்பாற்றியவர்கள் தண்டனை வழங்குவரா?

Go down

மகிந்தவைக் காப்பாற்றியவர்கள் தண்டனை வழங்குவரா? Empty மகிந்தவைக் காப்பாற்றியவர்கள் தண்டனை வழங்குவரா?

Post by oviya on Sat Sep 26, 2015 1:54 pm

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் விடுத்த அறிக்கை, அது தொடர்பில் கலப்பு நீதிமன்றம் பற்றிய பரிந்துரை என்ற தொடரில், இப்போது மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.
இந்த மாற்றங்கள் என்ன? பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதனால் நீதி கிடைக்குமா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

ஆக, இலங்கை குறித்த ஐ.நா மனித உரிமைகள் பேரவை தொடரில் நடைபெறுகின்ற விவாதங்கள் இலங்கை அரசுக்கு உதவி செய்வதாக அமைகிறதே தவிர பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதாகத் தெரியவில்லை.

கலப்பு நீதிமன்றம், உள்ளகப் பொறிமுறை இப்போது இன்னொன்று என்பதெல்லாம் இலங்கை அரசுக்கு உதவுகின்ற நோக்கில் ஏற்படுத்தப்பட்ட திட்டங்கள் என்பது இப்போது புரிந்திருக்கும்.

இலங்கையில் நடந்த போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கோரிக்கையெல்லாம் சர்வதேச விசாரணை வேண்டும் என்பதுதான்.

எனினும் அது பற்றி எங்கள் அரசியல் தலைமைகள் உட்பட யாரும் கவனம் செலுத்துவதாக இல்லை. ஆனால் சர்வதேச விசாரணை தவிர்ந்த வேறு எந்தவொரு விசாரணையும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எந்த விமோசனத்தையும் தராது என்பது சர்வ நிச்சயம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை அவர்கள் இலங்கையின் தற்போதைய அரசு இனப் பிரச்சினைக்குத் தீர்வைத் தரும். அந்தத் தீர்வு 2016ல் சாத்தியமாகும் என்று நம்புகின்றனர்.

இந்த நம்பிக்கையை வலுப்படுத்துவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைமை பதவி அமைந்துள்ளதாக சம்பந்தப்பட்டவர்களால் கருதப்படுகிறது.

இருந்தும் கூட்டமைப்பின் கொழும்புத் தலைமை நம்புவது போல இனப்பிரச்சினைக்கான தீர்வை இந்த அரசாலும் எட்ட முடியாது என்பதை அடித்துக் கூறமுடியும்.

இலங்கை அரசு இனப்பிரச்சினைக்குத் தீர்வைத் தரும் என்ற நம்பிக்கையில் சர்வதேச விசாரணை தேவை என வலியுறுத்தி நிலைமையைக் குழப்பக் கூடாது என்று கூட்டமைப்பு கருதலாம்.

ஆனால் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு என்பது சர்வதேச விசாரணை ஊடாகவே எட்டப்படும் என்ற உண்மையை உணர்வதில் நம்மவர்கள் தவறிழைக்கின்றனர்.

இதை நீங்கள் எப்படி சொல்ல முடியும். இதற்கு ஆதாரம் என்ன? என்று யாரேனும் கேட்டால் அதில் நியாயம் இருக்கிறது.

இங்குதான் ஓர் உண்மை உணரப்பட வேண்டும். அதாவது ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஒரு செய்தியைச் சொல்லியுள்ளார். அந்தச் செய்தி மின்சார நாற்காலியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­வை காப்பாற்றி விட்டேன் என்பதுதான்.

ஆக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிவிட்டு இவ்விதம் சொல்லப்படுமாக இருந்தால், கலப்பு நீதிமன்றம் அல்லது இலங்கையர்களும் வெளிநாட்டு நீதிபதிகளும் இணைந்து நடத்தும் விசாரணை என்பன எந்த வகையிலும் குற்றவாளிகளைக் காப்பாற்றுமே தவிர, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியையும் தராது இனப் பிரச்சினைக்குத் தீர்வையும் வழங்காது.

ஒருவேளை ஜெனிவாவில் உரையாற்றிய அமைச்சர் மங்கள சமரவீர, போர்க்குற்றவாளிகளுக்கு மின்சார நாற்காலி காத்திருக்கிறது என்று கூறியிருந்தால், அட! மனுசன் ஜெனிவாவில் வைத்து இப்படிக் கூறியிருப்பதால், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்ப முடியும்.

ஆனால் தமிழ் மக்களின் இழப்புகளுக்கு எல்லாம் மூலகாரணமாக இருந்த முதலாவது குற்றவாளியையே காப்பாற்றி விட்டேன் என்று கூறும்போது கலப்பு கலப்பும் கலப்பும் என்ற எந்தப் பொறிமுறையும் நமக்கு நீதியைத் தராது என்பதை உணர்ந்து கொண்டால் மட்டுமே தமிழினம் தப்பிப் பிழைக்க முடியும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum