Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


சிறைக்குள் இருந்துகொண்டே வெளிநாட்டு ஆசைகாட்டி பணமோசடி! கில்லாடி ஆசாமிக்கு உதவிய பெண் கைது

Go down

சிறைக்குள் இருந்துகொண்டே வெளிநாட்டு ஆசைகாட்டி பணமோசடி! கில்லாடி ஆசாமிக்கு உதவிய பெண் கைது

Post by oviya on Thu Sep 24, 2015 1:27 pm

வெலிக்கடை சிறைக்குள் இருந்து கொண்டே இத்தாலியில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பெருந்தொகைப் பணத்தை மோசடி செய்த கைதியொருவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதியொருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் துணையுடன் தொலைபேசி ஒன்றை சிறைக்குள் தருவித்துக் கொண்டுள்ளார்.

அதன் பின்னர் இத்தாலியில் தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாக பத்திரிகை விளம்பரங்களை தனது காதலி மூலமாக வெளியிட்டு பெருந்தொகையானோரை ஏமாற்றியுள்ளார்.

அவரது விளம்பரங்களை நம்பி ஏமாறுவோரிடம் வங்கிக் கணக்கு ஒன்றில் கொஞ்சம் கொஞ்சமாக பெருந்தொகைப் பணத்தை வைப்புச் செய்ய வைத்து அவரும் காதலியும் அதனை மோசடி செய்துள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் சந்தேக நபரின் தொலைபேசி வெலிக்கடை சிறைவளாக தொலைபேசிக் கோபுரத்தில் இருந்து செயற்படுவதை கண்டறிந்துள்ளனர்.

அதன் பின்னர் சிறைக்குள் இருந்து கொண்டே பலரை ஏமாற்றி பண மோசடி செய்த சந்தேக நபரும் கண்டறியப்பட்டுள்ளார்.

தற்போது சந்தேகநபரான சிறைக்கைதிக்கு எதிராக இன்னொரு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அவரது காதலியும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum