Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


தமிழ் மக்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டிய காலமிது: கி.துரைராசசிங்கம்

Go down

தமிழ் மக்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டிய காலமிது: கி.துரைராசசிங்கம்

Post by oviya on Sun Sep 20, 2015 1:45 pm

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக தமிழர்களின் வரலாறு இந்த மண்ணில் இருந்து விடக் கூடாது என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மாபெரும் விவசாயக் கண்காட்சியின் இறுதிநாள் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

அங்குதலைமையுரையின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கும் கிழக்கும் இணைந்தது தான் தமிழர் தம் வாழ் நிலம். நாம் இந்த இணைப்பை இப்போது கேட்கவில்லை, இது இணைந்திருந்த இணைப்பு. மன்னர் ஆட்சி காலம் தொட்டு இந்த இணைப்பு நீடித்திருக்கின்றது.

இதை இயற்கைத் தன்மையோடு பேணிட வேண்டும் என்பதனை நாம் நிகழ் நிலையிலே காட்டும் செயற்பாடாகத் தான் எமது வட மாகாண விவசாய அமைச்சர் அவர்களை இங்கு வரவழைத்திருக்கின்றோம்.மன்னர் ஆட்சிக் காலத்தில் வன்னிய மன்னர்கள் எமது தமிழ் மொழியையும் கலாச்சராத்தையும், பண்பாட்டையும், வாழ்வியலையும் தமிழ் மரபோடு கட்டிக் காத்து வந்தார்கள்,

அதற்குப் பின்னர் தமிழ் அறிஞர்களின் காலத்தில் நல்லை நகர் ஆறுமுக நாவலருடன் சேர்த்து முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை ஆகியோர் தமிழை வளர்த்தனர்.

அதற்குப் பின்னர் வந்த அரசியல் பாங்கில் தந்தை செல்வா உட்பட இங்கு இராஜவரோதயம், இராஜதுரை, இராசமாணிக்கம் போன்றவர்களும் கையோடு கை கோர்த்து வடக்கையும் கிழக்கையும் இணைத்துக் கொண்டிருந்தோம்.

அது இன்னும் தொடர்ந்திட வேண்டும் என்பதற்காக இன்னும் முயன்று கொண்டிருக்கின்றோம்.அந்த முயற்சியினுடைய ஒரு நல்ல அடையாளமாக எமது வட மாகாண விவசாய அமைச்சரின் இந்த விஜயம் விளங்குகின்றது.

இப்போதெல்லாம் ஜெனீவாவைப் பற்றி அனைவரும் சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு விடயத்திற்கும் பல்வேறு விளக்கங்கள் உண்டு தமிழ் மக்கள் மிகவும் அவதானமாகவும் நிதானமாகவும், பக்குவமாகவும், கண்ணியமாகவும் நடந்து கொள்ள வேண்டிய காலம் இது.

எமக்கு முன்னே வந்த எத்தனையோ சந்தர்ப்பங்களையெல்லாம் நாம் தொலைத்திருக்கின்றோம். அவ்வாறு தொலைத்ததன் கராணமாக மிகப்பெரிய அனர்த்தங்களுக்கு ஆளாகி இறுதியில் எஞ்சியோர்களாக எச்சசொச்சங்களாக நாம் இருக்கின்றோம்.

எரிந்து சாம்பலாகிக் கிடந்தாலும் கூட பீனிக்ஸ் பறவையாகப் பறப்போம் என்பதை நாம் நிலைநாட்டிக் கொண்டிருக்கின்றோம்.

இருந்த போதிலும் கூட ஜனநாயகம் என்பது மக்கள் தொகையிலே தான் காலூன்றி நிற்கின்றது என்கின்ற ஒரு விடயத்தை நாம் என்றுமே மறந்து விடக் கூடாது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக தமிழர்களின் வரலாறு இந்த மண்ணில் இருந்து விடக் கூடாது.

எனவே இப்போது இருக்கின்ற மக்களில் ஒருவர் கூட போராட்டமோ அல்லது வேறு ஏதும் சொற்கள் மூலமோ இழந்துவிடாத வகையில் வழி நடந்து செல்ல வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்கு உண்டு.

அந்தப் பொறுப்பில் தலைமை தாங்கி எங்கள் தலைமை மிகத் திறம்படச் செய்து கொண்டிருக்கின்றது. இப்போது எமது விடயங்கள் சர்வதேச மயப்படுத்தப்பட்டு சர்வதேசத்தில் இருந்து ஒரு குரல் வந்து கொண்டிருக்கின்றது.

இது தெடர்பான விளக்கங்கள் விவேகமானதாக இருக்க வேண்டும், நடைமுறை சார்ந்ததாக இருக்க வேண்டும், நம்முடைய அடுத்த பாதச் சுவடுகளுக்கு அது சரியான முறையில் வழிகாட்டுபவையாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் மனங்கொள்ள வேண்டும் என்றால்,

எமது விளக்கங்கள், எமது பேச்சுக்கள், எங்களுடைய கருத்தாடல்கள் எல்லாம் ஒரே விதமாக இருக்க வேண்டும் அதைத்தான் எமது தலைவர் சம்மந்தன் ஐயா கூறியிருக்கின்றார் தமிழர்கள் அனைவரும் ஒரே குரலில் பேச வேண்டும் என்று.

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை பற்றி ஏதோ ஏதோவெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தர்கள். உள்ளக விசாரணை ஏற்படப் போகின்றது என்றெல்லாம் சொன்னார்கள்.

ஆனால் எமது தலைமையும் நாங்களும் அதற்குக் காது கொடுக்கவில்லை. இவையெல்லாம் நசிந்த செய்திகள் என்பது வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் இருந்து எமக்கு புலப்படுகின்றது.

ஒரு நாட்டினுடைய தீர்வு அந்த நாட்டில் இருக்கின்ற நல்லிணக்கத்தின் காரணமாகத் தான் ஏற்பட முடியும் என்ற மிகப் பெரிய அரசியற் தத்துவத்திலே எமது தலைமை நகர்ந்து கொண்டிருக்கின்றது.

இது காந்தியின் அரசியற் தத்துவம் பிரித்தானியாவினால் பறிக்கப்பட்ட சுதந்திரத்தை பிரித்தானியாவிடம் இருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று போராடியமையினாலேயே இந்தியா அன்று சுதந்திரம் பெற்றது.

தீர்வுகள் என்பது உள்நாட்டில் தான் எட்டப்பட வேண்டும் தீர்வுகள் நல்லிணக்கத்தின் அடிப்படையில் தான் அமைய வேண்டும் அதற்குரிய அழுத்தங்களை நாம் எவ்விடத்திலிருந்தாவது பிரயோகிக்கலாம். மனங்களின் சந்திப்பு தான் இணக்க ஏற்பாட்டிற்கான அழுத்தங்களைக் கொடுப்பது.

எங்களைப் பேரினவாதம் எந்த அளவிற்கு நசித்தது, உருக்குலைத்தது, அடையாளம் இல்லாதவர்களாக ஆக்க முயற்சித்ததது என்ற வரலாற்றை எல்லாம் மனதில் பதித்துக் கொண்டாலும் கூட அந்தப் பேரினவாதத்துடன் சேர்ந்து தான் எமது சம உரிமையை இந்த நாட்டில் நிலைநாட்டிட முடியும் என்கின்ற தத்துவத்தில் இருந்து நாம் அசைந்து விடக் கூடாது.

எங்களுடைய தலைமை சரியான பொருள்கோடலைச் செய்து கொண்டிருக்கின்றது. வருகின்ற விடயங்களுக்கெல்லாம் எமது தலைமை கொடுக்கின்ற பொருட் கோடல்களை நாம் சரியாக உள்வாங்கிக் கொண்டு,

அதன்பால் எங்கள் மக்களை சரியான முறையில் வழிநடத்த வேண்டிய பொறுப்பு அரசியற் தலைமைகளுக்கு குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உண்டு.

இவ்வாறு எமது மக்களை வழிநடத்துவோமானால் நிச்சயமாக ஒன்றைரை வருடத்திற்குள் இந்த நாட்டில் நாம் தேடிக் கொண்டிருக்கின்ற அரசியல் அமைப்பின் அத்திவாரத்தினை தொடக்கூடியவர்களாக நாம் இருப்போம். அத்தகு நிலைக்கு நாம் இப்போது முன்னேறியிருக்கின்றோம்.

எனவே சர்வதேசத்தின் பார்வை இங்கு இருக்கின்றது. அவர்களின் பரிந்துரைகள் பல இருக்கின்ற அதற்கு எத்தனை பொருள் கோடல்கள் எப்படி இருந்தாலும் எமது தலைமை சொல்லுகின்ற பொருள் கோடல் அர்த்தபுஸ்டியுள்ள பொருள் கோடல்,

எப்போதும் தமிழ் மக்களை நெஞ்சில் அள்ளிக் கொண்டு சொல்லுகின்ற பொருள் கோடல், எவ்விதத்திலும் தமிழ் மக்களைக் கைவிடாத பொருள் கோடல் அந்தப் பொருள் கோடலில் தான் நாம் செல்ல வேண்டும்.

எங்களைக் குழப்புவதற்காகவும் எங்களைச் சிதறிச் சின்னாபின்னமாக்குவதற்காகவும் பலர் எதேதோ சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் நாங்கள் ஒற்றுமைப்படக் கூடாது, தங்களுடைய பத்திரிகைகள் விற்பனை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும்,

இன்னும் பலர் கருத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள், தங்களுடைய கருத்துக்கள் இதுவரையில் கேட்கப்படவில்லை என்பதற்காக தங்களுடைய கருத்துக்களை உயர்த்தி இன்னும் எத்தனையோ பேர் கருத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

இவற்றையெல்லாம் விடுத்து ஒரே பொருள் ஒரு விளக்கம், ஒரே தீர்வு, ஒரே தலைமையினுடைய கூற்று என்ற அடிப்படையிலே நாம் எல்லாம் செல்லுகின்ற போதுதான் இந்த நாட்டில் அமைதியும்,

தமிழ் மக்களுக்கு சமநீதியும் கிடைக்கும் அந்த வகையில் நாம் எம்முடை சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் நடைமுறைகளையும் நடத்தைகளையும் செயற்படுத்திக் கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum