Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


தமிழக சட்டசபை தீர்மானம் காலம் கருதி ஈழத் தமிழினத்திற்கு செய்த பேருதவி! சிறீதரன்

Go down

தமிழக சட்டசபை தீர்மானம் காலம் கருதி ஈழத் தமிழினத்திற்கு செய்த பேருதவி! சிறீதரன்

Post by oviya on Wed Sep 16, 2015 3:08 pm

சர்வதேச விசாரணை வேண்டுமென தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீரமானமானது காலம் கருதி ஈழத் தமிழினத்திற்கு செய்த பேருதவி என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் முள்ளிவாய்க்கால் வரை தமிழ் மக்களை கொன்றொழிக்க அன்றைய மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தால் நடத்தப்பட்ட இனஅழிப்பு போரில் நிகழ்த்தப்பட்ட மானுட அவலத்தை ஏற்படுத்திய போர்க்குற்றங்கள் தொடர்பாக,

சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படவேண்டும் என எமது தொப்பூள் கொடி உறவான தமிழகத்தின் அரச அவை இன்று மீண்டும் மாண்புமிகு தமிழகத்தின் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் தலைமையில் ஒருமித்த குரலில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது கண்டு ஈழத்தமிழ் மக்கள் நம்பிக்கை அடைந்துள்ளார்கள்.

வகைதொகையின்றி 2009ல் எமது மக்கள் இலங்கை அரசாங்கப்படைகளால் கொன்றொழிக்கபட்ட ஆறா வடு எமது மக்களின் நெஞ்சங்களில் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது.

போரின் போது மானுடம் வெட்கித் தலை குனியும்படி பெண்கள் பாலியல் வல்லுறவு கொடூரங்களுக்கு உள்ளாக்கப்பட்ட பெரும் வலி எமது இதயங்களை வாட்டி வதைக்கின்றது.

காணாமல் போன பல்லாயிரக் கணக்கானவர்களின் நிலை இன்னதென்று தெரியாமல் அவர்களின் உறவுகள் தேடி அலையும் அவலநிலை. இன்னமும் சிறைகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகளாக எமது இளைஞர்கள் யுவதிகள் வதைக்கின்ற அவலம்.

இந்த நிலையில் யாவற்றையும் ஈழத்தில் இழந்து மானத்தையும் நம்பிக்கையையும் மட்டும் காத்துக்கொண்டு தமக்கு சர்வதேச ரீதியாக ஒரு விடிவு வராதா என எமது மக்கள் ஏங்கும் நிலையில் ஐ.நாவில் கொண்டு வரப்பட்ட இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானம் பிராந்திய மேற்குலக நலன்கள் கருதி பலமிழந்து திசைமாறிவிடுமோ என ஏங்கும் பொழுதில்,

இன்று இந்திய பேரரசையும் சர்வதேசத்தையும் நோக்கி தமிழக அரசாங்கம் கொண்டுவந்துள்ள தீர்மானம் மிகவும் ஒரு பலத்தை தருகின்றது.

மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள்' ஒரு லட்சியத்தை பெறுவதற்கு, எத்தைகய தியாகத்தையும் செய்ய வேண்டும் என்றும் நினைப்பது சாதாரணம் என்று கூறிய பேரறிஞர் அண்ணா அமுத மொழிக்கு ஏற்ப தமிழகத்தின் லட்சியத்துக்கும்,

இலங்கை வடக்கு மாகாண சபை தீர்மானத்திற்கு ஏற்பவும், இலங்கை போரின்போது சர்வதேச சட்டம் ஜெனீவா ஒப்பந்தங்களை மீறி போர்குற்றங்கள் நடத்திய அனைவர் மீதும் சர்வதேச விசாரணை நடத்த இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் சேர்ந்து ஐ.நா.வில் வலியுறுத்த வேண்டும்.

அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பது தெரிந்தால் இந்தியா ராஜதந்திர ரீதியில் அமெரிக்காவை தன்பக்கம் இழுத்து இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்த வேண்டும் என்று இந்திய பேரரசை தமிழக சட்டப்பேரவை கேட்டுக்கொள்கிறது" என முன்மொழிந்துள்ள வார்த்தைகள் காலத்தினால் ஈழத்தமிழருக்கு செய்த பேருதவியாகவே கருத முடியும்.

தமிழக சட்ட சபையில் பல்வேறு கட்சிகள் அங்கம் வகித்தாலும் ஈழத்தமிழர்களின் வாழ்வுக்கு விடிவு வேண்டும். அதற்காக சர்வதேசத்தில் கொண்டுவரப்படும் விடயத்தில் ஒன்றாக தமிழக முதல்வரின் கருத்துக்கு ஒருமித்த ஆதரவு அளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகின்றது என தெரிவித்துள்ள பா.உறுப்பினர் சி.சிறீதரன்,

வரலாற்று ரீதியாக தமிழக மக்கள் ஈழ மக்களின் துயரங்கள் கண்டு பல தசாப்தங்களாக சாத்வீக வழியில் இந்தியாவில் போராடி வருகின்றார்கள். பலர் அதற்காக அறவழியில உயிர்கொடுத்திருக்கின்றார்கள். இன்னமும் ஏராளமானவர்கள் ஈழத்தில் இறுதிப் போரில் நடத்தப்பட்ட கொடூரம் கண்டு அதிர்ந்து இதயம் இடிந்து போய் உள்ளார்கள்.

தமிழகம் குமுறிக்கொண்டிருக்கின்றது என்பதற்கு தமிழக சட்ட சபையில் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தலைமையில் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் சாட்சியாகின்றன.

இந்த வரலாற்றுப் பெருமை மிக்க தீர்மானம் எமது மக்களின் வாழ்வில் ஒளியேற்றுவதற்கு மிகுந்த பலமாய் அமையும் என்று நம்புகின்றோம்.

ஐ.நாடுகள் சபையில் இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் திசைமாறாமல் மானுட அநீதியை நிகழ்த்தியவர்களை சர்வதேச சட்டங்களின் முன் நிறுத்தி தர்மத்தை நிலை நாட்ட தமிழகத்தின் மானுட நேசம்மிக்க தீர்மானம் பலம்சேர்க்கும் என மேலும் தெரிவித்துள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum