Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


இலங்கைக்குள் படையெடுத்த அமெரிக்காவின் மூத்த அதிகாரிகளின் அவசியமும் அவசரமும்!

Go down

இலங்கைக்குள் படையெடுத்த அமெரிக்காவின் மூத்த அதிகாரிகளின் அவசியமும் அவசரமும்!

Post by oviya on Wed Aug 26, 2015 3:02 pm

மேற்குல ஜாம்பவான்கள் வரிசையில் அமெரிக்கா இன்றுவரை தன்னை ஒரு தானைத்தளபதியாகவே உருவகித்து வருகின்றது.
பொருளாதார ரீதியில் கடந்த காலங்களின் பாரியளவில் பல சரிவுகளை சந்தித்திருந்தாலும் தன் தலைமைத்துவ பண்பிலிருந்து அன்றிலிருந்து இன்றுவரை சற்றேனும் தளரவில்லை.

அந்தவரிசையில் உலகின் சகல நாடுகளில் உள்விவகாரங்களிலும் தலையிடுவதை அமெரிக்கா குறைத்துக்கொண்டதுமில்லை.வளர்ந்துவரும் நவீன உலகில் ஆசியா உலகின் ஒரு தேடுபொறியாக மாறியுள்ளது. வல்லரசான சீனாவிடம் எப்படி தப்பிப்பது என உலகம் அங்கலாய்க்கும் வேளையில் வளர்ந்துவரும் வல்லரசான இந்தியாவின் உதவியை நாடுகிறது.

இன்றிருக்கும் இந்தியாவின் பிரதமர் மோடி அவர்கள் சீனச் சார்பு பொருளாதார கொள்கையில் ஒரு காதலன் என்றே சொல்லலாம். - காரணம் இவர் முன்னர் முதலமைச்சராக இருந்த குஜராத் மாநிலத்தில் பொருளாதார கொள்கையானது சீனச் சார்பு பொருளாதார கொள்கையே.

அத்துடன் இவர் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் மூன்று முறை சீனாவுக்கு பயணம் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

இவைகளுடன் ஒப்பிடுகையில் மோடி சீனாவை எவ்வளவு தூரம் ஆசியாவில் கட்டுப்படுத்துவார் என்பது கேள்விக்குறியே.

இதற்கு தகுந்த உதாரணமாக ஆசியாவில் பலமான இந்தியாவை கட்டியெழுப்புவோம் என பிரதமரானதும் முதல் உரையிலேயே குறிப்பிட்டிருந்தார்.

இவரது சகல உச்சரிப்புக்களும் ஆசியா ஆசியா என்றுள்ளதனால் ஆசியாவுக்குள் ஒரு உள்ளக முரண்பாட்டை இவர் ஒருபோதும் விரும்பமாட்டார் என்பது வெளிப்பாடு.

இவ்விடத்திலேயே இலங்கை தீவு முதன்மை பெறுகிறது. அதிலும் குறிப்பாக ஆசியா போட்டா போட்டிகளின் வியாபார பொருளாக ஈழத்தமிழரை மேற்குலகம் கூறுபோட ஆரம்பத்துள்ளமை தெட்டத் தெளிவாக புலப்படுகின்றன.

அதனொரு கட்டமாகவே செப்டம்பர் மாத கூட்டத்தொடரில் இலங்கையில் இடம்பெற்றது இன அழிப்பு என ஐநாவில் கடந்த கால கூட்டத்தொடர்களில் விவாதிக்கப்பட்ட நிலையில் 2015 செம்டம்பர் மாதமளவில் இப்பிரேரணை இறுதிக்கட்ட வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.

அப்பிரேரணையை 2013 இல் முன்மொழிந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், ஆட்சியாளர்கள் மாறியிருப்பதால் அப்பிரேரணையும் தேவையற்றது என்கிற நிலைப்பாட்டில் அமெரிக்கா உள்ளதா என்னும் ஐயம் ஏற்படுகின்றது.

காரணம் கடந்த காலங்களில் உள்ளார்ந்த ரீதியாக அமெரிக்கா இப்பிரேரணையை முன்மொழியாமைக்கு காரணம் மகிந்த ராஜபக்ஷவுக்கும் சீனாவுக்கும் இடையே இருந்த நெருங்கிய உறவே.

அன்றைய காலங்களிலும் மேற்குலகிற்கு ஈழத்தமிழரின் அழிவோ அல்லது அவலமோ ஒரு பொருட்டாக தெரியவில்லை. மகிந்தவை பழிவாங்குவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு ஆயுதமே ஈழத் தமிழர்.

இப்படியான நிலையில் செப்டம்பர் மாதத்தை அண்மிப்பதற்கு இன்னும் சில நாட்களே மீதமுள்ள நிலையில் அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால், மற்றும் இராஜாங்க திணைக்க மூத்தநிலை அதிகாரி ரொம் மாலினோவ்ஸ்கி ஆகியோர் எந்தவொரு முன்னறிவிப்பு திட்டமிடலுமின்றி இலங்கைக்குள் நுழைந்திருப்பது பாதிக்கப்பட்ட ஈழத்தமிழினத்திற்கு எவ்வளவு உதவும் என்பதும் ஐயப்பாடே....

வழமையாக அமெரிக்காவின் சாதாரண ஒரு அதிகாரி வேறொரு நாட்டுக்கு செல்வதெனில் ஒரு மாத காலத்திற்கு முன்னதாகவே அவ் விஜயம் குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் அறிவிக்கப்படும்.

அவ் எளிய நடைமுறை கூட தற்போதைய விஜயம் தொடர்பில் பின்பற்றப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் யார் வெற்றி பெற்றார்கள் என்பது முக்கியமல்ல, இவர்களது வெற்றியையே அவசியமும் அவசரமும் என மேற்குலகம் விரும்பியிருந்தமைக்கு - இலங்கைக்கு அமெரிக்காவின் மூத்த இராஜ தந்திரிகளின் அவசர விஜயமே முக்கிய ஆதாரம்.

2009 இல் தமிழரின் ஆயுத பலம் மெளனிக்கப்பட்டதன் பிற்பட்ட இன்றுவரையான நாட்களை இராஜதந்திர யுத்தமென வரிக்குவரி கூறும் தமிழ் அரசியல் தலைவர்களும் புலம்பெயர் தமிழ் சமூகமும் எதிர்கால பயணத்தை எப்படி வடிவமைக்கப்போகின்றார்கள்...

மேற்குலகின் சதிவலைக்குள் இவ்விரு தமிழ் அரசியல் தலைவர்களும் புலம்பெயர் தமிழ்ச் சமூகமும் சிக்கி சின்னாபின்னமாகி விடுமா... இல்லையேல் பலமுள்ள தமிழரின் தீர்வுக்கு மேற்குலகைப் பயன்படுத்துமா....?

இந்த வினாக்களுக்கு விடை தேடுவதற்குள் மேற்குலகின் நிகழ்ச்சி நிரலில் இருந்து தமிழினத்தின் அழிவுகள் அழிக்கப்பட்டுவிடுமா.....?
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum