Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


மன்னார் பேசாலையில் 3 ஏக்கர் காணியை கடற்படையினர் அபகரிக்க முயற்சி

Go down

மன்னார் பேசாலையில் 3 ஏக்கர் காணியை கடற்படையினர் அபகரிக்க முயற்சி

Post by oviya on Fri Aug 07, 2015 3:11 pm

மன்னார் பேசாலை வெற்றிமாங்குடியிருப்பு கிராமத்தில் உள்ள 3 ஏக்கர் வீஸ்தீரணம் கொண்ட காணியை கடற்படையினர் அபகரிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பேசாலை சென்-விக்டரிஸ் ஆலய அருட்பணி பேரவை கவலை தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பேசாலை சென்-விக்டரிஸ் ஆலய அருட்பணி பேரவை மன்னார் பிரஜைகள் குழுவின் கவனத்திற்கு இன்று கொண்டு வந்துள்ளதோடு முறைப்பாட்டையும் பதிவு செய்துள்ளனர்.

குறித்த முறைப்பாட்டில் மேலும் குறிப்பிடுகையில்,

பேசாலை கிராமத்தின் மேற்குப் பக்கமாக பேசாலையில் இருந்து சுமார் 4 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள சுமார் 210 ஏக்கர் வீஸ்தீரணம் கொண்ட வெற்றிமாங்குடியிருப்பு என்றழைக்கப்படும் இக்காணி பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்திற்குச் சொந்தமானது.

இக்காணிக்கான உறுதி,நில அளவைப்படம், வரலாற்றுத்தாள் போன்ற ஆவணங்கள் மன்னார் மறைமாவட்ட ஆயரின் பெயரில் எம்மிடம் உள்ளது.

சுமார் 10 வருடங்களுக்கு முன் இங்கு வந்த கடற்படையினர் இங்கு படை முகாம் ஒன்றை அமைக்க முற்பட்ட போது பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய அருட்பணிச்சபையினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து படை முகாம் ஒன்றை குறித்த கோயில் காணியில் அமைப்பதை தடுத்தனர்.

இந்த நிலையில் இப்பணிக்கு பொறுப்பாக வந்திருந்த கடற்படை பொறுப்பதிகாரி எமது கிராமத்தின் அன்நாள் பங்குத்தந்தை அவர்களுடன் இணக்கமாக நட்புறவுடன் உரையாடி தாங்கள் தற்காலிகமாக சிறிது காலம் இங்கு இருப்போம் என்றும் பொருத்தமான ஒரு இடத்தைக் கண்டு பிடித்தவுடன் இங்கிருந்து இடம் மாறி விடுவோம் என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில் எமது பங்குத்ததந்தை மற்றும் மக்களின் எதிர்ப்பின் மத்தியிலும் ¾ ஏக்கர் அளவான காணியினை பலவந்தமாக பிடித்து அக்காணியில் தற்காலிகமாக தமது கடற்படை முகாமை அமைத்தனர்.

தற்போது அக்காணி விசாலமாக்கப்பட்டுள்ளதோடு சுமார் 3 ஏக்கர் அளவுள்ள காணியை கடற்படையினருக்கு அளந்தெடுப்பதற்கான முயற்சிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றது.

கடந்த 2013 ஆம் ஆண்டு யூலை மாதமளவில் மேற்குறித்த காணியை நில அளவை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது எமது மக்களிடமிருந்து பாரிய எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

அவற்றை எல்லாம் புறந்தள்ளி அதை அரச வர்த்தமாணியில் பிரகடனப்படுத்தி எந்த வித அறிவித்தலும்,நஸ்டர்டுகளும் இன்றி தமது இஸ்டத்துக்கு நில அளவையாளர் ஒருவரைக் கொண்டு குறித்த காணியில் சுமார் 3 ஏக்கர் காணியை சுவீகரிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த காணி அபகரிக்கும் செயற்பாட்டை பேசாலை வெற்றி நாயகி ஆலய மேய்ப்புச்சபையும்,பேசாலை மக்களும் வண்மையாகக் கண்டித்துள்ளனர். குறித்த காணி அபகரிப்பு முயற்சியை உடனடியாக கைவிடுமாறும் சில கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.

1)மத பீடங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை அரசு சுவீகரிப்பது பொருத்தமானதில்லை.

2)இவ்வளவு காலமும் பல்வேறு படைத்தரப்பினரால் கைப்பற்றப்பட்ட காணிகளை மீண்டும் அதன் உரிமையாளர்களுக்கு வழங்குவது என்ற தீர்மானத்தில் பல ஏக்கர் காணிகளை மீள உரிமையாளர்களிடம் வழங்கி வருகின்ற இந்த அரசாங்கம் இவ்வேளையில் இக் காணி அபகரிப்பு செயலானது அரசின் தற்போதைய கொள்கைகளுக்கு முரணானதாக அமைந்துள்ளது.

3)படை வீடுகள் எம் மத்தியில் வேண்டாம் என்ற குரல் வட பகுதி மக்களிடம் இருந்து மட்டுமல்ல அகில,உலக ரீதியிலும் ஆமோதிக்கப்படுகின்ற இவ் வேளையில் இக் காணி சுவீகரிப்புக்கள் முரணான தோற்றப்பாட்டைக் கொண்டுள்ளது.

3)நல்லாட்சி அரசாங்கம் என்றும்,சுவீகரிக்கப்பட்ட,அபகரிக்கப்பட்ட காணிகளை மீள அதன் உரிமையாளர்களுக்கு வழங்குவதாக கூறிவரும் அரசாங்கத்தின் இச் செயற்பாடானது ஜனநாயகத்திற்கும்,நல்லாட்சி தத்துவத்திற்கும் முரணாக உள்ளது.

-எனவே எமக்குச் சொந்தமான குறித்த காணியை அளவீடு செய்வதையும்,காணி சுவீகரிப்புச் செய்யப்படுவதையும் உடனடியாக நிறுத்தும் பாடியும்,ஏற்கனவே உள்ள தற்காலிக கடற்படை முகாமை அகற்றி அக்காணியை மீளவும் எமக்கு ஒப்படைக்கும் படியும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum