Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


மஹா பைரவர் வணங்குவோம்

Go down

மஹா பைரவர் வணங்குவோம்

Post by ram1994 on Sat Dec 06, 2014 3:08 pm

இப்போது சில கோடி ஆண்டுகளுக்கு முன்பு.அப்போது முருகர் கூட பிறக்கவில்லை.

அந்தகாசுரன் என்னும் சிவபக்தன் நீண்ட வலிய தவம் புரிந்து,சிவபெருமானிடம் வரம் பெற்றான்.அந்த வரத்தின் சக்தியால் மும்மூர்த்திகளையும்,மற்ற தேவர்களையும் துன்புறுத்தினான்.அவர்களை சேலை அணிந்து,கையில் வளையிட்டு,கண்ணில் மைதீட்டி,பெண் வேடத்தில் தனக்கு சாமரம் வீசி பணிபுரியச்செய்து,இழிவு படுத்தினான்.அந்தகாசுரன் இருள் என்னும் சக்தியைப் பெற்றதால்,பிரபஞ்சம் முழுவதும் இருளைக்கொண்டு ஆட்சி நடத்தினான்.

இவர்கள் அனைவரும் அந்தகாசுரனிடம் போரிட்டுத் தோற்றனர்.பின்னர்,முழு முதற்கடவுளான சிவபெருமானைத் தஞ்சமடைந்து முறையிட்டனர்.தாருகாபுரத்தை எரித்த காலாக்னி ,சாந்தமாகி சிவபெருமானின் நெஞ்சில் ஓர் பகுதியாக இருந்தது.தேவர்களின் துயர் துடைக்க சிவபெருமான் அந்த அக்னிக்குஞ்சுக்கு ஆணையிட்டார்.அதில் விஸ்வரூபம் எடுத்து வந்தவர்தான் ஸ்ரீபைரவர்.

அதுவும் எப்படி விஸ்வரூபம் எடுத்தார் எனில்,எட்டு திக்குகளிலும் அந்தகாசுரனால் உருவாகிய இருளை நீக்கிட எட்டு பைரவர்களை சக்தியுடன் புறப்பட உத்தரவிட்டார்.

அதன்படி,

1)அசிதாங்க பைரவர் + பிராம்மி

2)ருரு பைரவர் + மகேஸ்வரி

3)உன்மத்த பைரவர் + வாராஹி

4)குரோதன பைரவர் +வைஷ்ணவி

5)சண்டபைரவர் + கவுமாரி

6)கபால பைரவர் + இந்திராணி

7)பீஷண பைரவர் + சாமுண்டி

Coolசம்ஹார பைரவர் + சண்டிகா

ஆகியோர் தம்பதி சகிதமாக புறப்பட்டு,அந்தகாசூரனை அழித்து உலகிற்கு ஒளியைக் கொடுத்தனர்.இதனால்,தேவர்கள் மகிழ்ச்சியடைந்து அனைவரும் தத்தம் ஆயுதங்களை பைரவருக்குக் கொடுத்தனர்.பைரவரை ஜைன சமயத்தில் விஜயபத்திரர்,வீரபத்திரர்,மணிபத்திரர்,ஸ்ரீபைரவர்,அபராஜிதர் என அழைக்கின்றனர்.

ஜைன சமயத்தில் 96 வகையான பைரவர்கள் உள்ளனர்.பௌத்த சமயத்தில் 84 வகையான பைரவர்களும்,வாமம் என்னும் சாக்த மதத்தில் 64 வகையான பைரவர்களும் உண்டு.கிறிஸ்தவ சமயத்தில் “நோவாஸ் ஆர்க்”, “செயிண்ட் மைக்கேல்”, “செயிண்ட் ஜார்ஜ்” ஆகியோர் பைரவ அம்சங்களே.ஆகமங்கள்,சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள அஷ்ட பைரவர் விளக்கங்களை கூர்ந்து நோக்கினால் மேலே கூறப்பட்டவை,தெள்ளத்தெளிவாக விளங்கும்.

அஷ்ட பைரவர்களும் அறுபத்தி நான்கு காலங்களில்,அறுபத்தி நான்கு தோற்றங்கள் கொண்ட பைரவராகக் காட்சி தருகிறார்கள். 

12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே.தேவ,அசுர,மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார்.சனிக்கு வரம் தந்து,இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார்.சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே.தன் தமையன் எமன்,பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன்,பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான்.தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி,மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும்,கால வர்த்தமான நிர்ணயப்படி(ஜோதிட ரீதியாக சனிப்பெயர்ச்சிப்படி) நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார்.அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப்பிரமாணம் பெற்றுக்கொண்டார்.சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும்,அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவரகளுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பைரவபெருமானிடம் விரும்பினார்.அதனால்தான் ,ஏழரை நாட்டுச்சனி,அஷ்டமச்சனி,ஜன்மச்சனியால் அவதிப்படுவோர் பைரவ வழிபாடு ஒன்றினால் மட்டுமே அத்தொல்லைகளிலிருந்து விடுபட முடியும். 

ram1994

Posts : 71
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum