Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பிரதமர் மோடி அரசுக்கு எதிராக பிரசாரம்: மாணவர் அமைப்புக்கு சென்னை ஐ.ஐ.டி. தடை

Go down

சென்னை - பிரதமர் மோடி அரசுக்கு எதிராக பிரசாரம்: மாணவர் அமைப்புக்கு சென்னை ஐ.ஐ.டி. தடை Empty பிரதமர் மோடி அரசுக்கு எதிராக பிரசாரம்: மாணவர் அமைப்புக்கு சென்னை ஐ.ஐ.டி. தடை

Post by oviya Fri May 29, 2015 2:26 pm

பிரதமர் மோடி மற்றும் இந்து மதத்தினருக்கு எதிராக வெறுப்புப் பிரசாரம் மேற்கொண்டதாக மாணவர் அமைப்பு ஒன்றுக்கு ஐ.ஐ.டி. சென்னை தடை விதித்துள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.யின் ஒரு பிரிவு மாணவர்கள் இணைந்து அம்பேத்கார்-பெரியார் ஸ்டடி சென்டர் (ஏபிஎஸ்சி) என்ற அமைப்பினை இயக்கி வருகின்றனர்.

இந்த அமைப்பு மீது அண்மையில் பெயர் குறிப்பிடாத சிலர் புகார் தெரிவித்துள்ளனர்.

அந்த புகாரில், ஏபிஎஸ்சி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசின் கொள்கைகளை அவதூறாக விமர்சித்தும், பிரதமர் மோடிக்கும், இந்து மதத்தினருக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் செய்கின்றனர்.

எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இது தொடர்பாக கடந்த 15ம் திகதியன்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணைச் செயலர் பிரிஸ்கா மேத்யூ சென்னை ஐ.ஐ.டி தலைமைக்கு விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.

தற்போது மத்திய அரசு விளக்கம் கோரி அனுப்பிய கடிதத்தை சுட்டிக்காட்டி சென்னை ஐஐடி தலைவர், ஏபிஎஸ்சி அமைப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

ஏபிஎஸ்சி அமைப்பின் மீதான தடை குறித்து, ஐஐடி மாணவர்கள் பிரிவு தலைவர் சிவகுமார் எம். ஸ்ரீனிவாசன் கூறுகையில், ஏபிஎஸ்சி அமைப்பு மீது தடை விதிக்கப்பட்டது குறித்து கடந்த 22-ம் திகதியே மின்னஞ்சல் மூலம் எனக்கு தெரிய வந்தது.

ஏபிஎஸ்சி உறுப்பினர்கள் மாணவர்கள் அமைப்புக்கான சட்டத்திட்டத்தை கடைபிடிக்க தவறியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

ஏபிஎஸ்சி உறுப்பினர் கூறுகையில், எங்கள் அமைப்பின் மீது தடை உத்தரவு பாய்ந்துள்ளது குறிப்பிட்ட அந்த மின்னஞ்சல் வரும்வரை எங்களுக்குத் தெரியாது.

மேலும், எங்களிடம் எவ்விதமான விளக்கமும் கோரப்படவில்லை எனக் கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum