Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


சனிப்பெயர்ச்சி எளிய பரிகாரம் செய்வோம்

Go down

சனிப்பெயர்ச்சி எளிய பரிகாரம் செய்வோம்

Post by ram1994 on Mon Dec 22, 2014 11:28 am

சிவனின் அம்சமே நமது பைரவர் அம்சம்,  நமது இன்னல்கள், எதிர்ப்புகள்  மற்றும் தடைகளைத்  தகர்த்து எரிபவர். இதை நமக்கு பறைசாற்றும் விதமாக நமது சனி பகவானின் வாழ்க்கையில் நடந்த புராண சம்பவம் ஒன்று, " நமது சனி பகவானும்  ஒரு நாள் கர்ம வினையை அனுபவிக்க வேண்டிய காலம் ஒன்று வந்தது, அந்த நேரத்தில் நமது சனி பகவான்., தனது வினையை களைய அனைத்துப்  பிரம்ம ரிஷிகளையும் மற்றும் யோகி களையும்  சந்தித்து., தன்னுடைய துயரத்தின் வேதனையை அவர்களிடம் சொல்லி., தீர்வுக்கான விடையை கேட்டார். அதற்கு அவர்கள் அனைவரும் உரைத்த மந்திர சொல் பைரவர். அன்று முதல் பைரவரை  நோக்கி தனது பிரார்த்தனை செய்ய முயன்றார், உலகம் முழுவதும் அலைந்தார்.

,ஆனால் அவரால் அதில் இருந்து  விடுபெற முடிய வில்லை , அப்போது அவர் மனதில் தோன்றிய ஒரு விஷயம் அவர் மனதை மிகுந்த குழப்பத்தை உண்டாக்கியது. எப்பொழுதுமே ஒருவரின் வினையை களையும் திறனும், உரிமையும் குருவின் பற்றிலேயே இருக்கிறது என்பதை உணர்ந்தார். அப்போது மறு நிமிடமே  ஒரு மாமுனிவரின் உருவத்தை கண்டார்., அப்போது சனிபகவானின் மனநிலையைப் புரிந்துகொண்ட அந்த மகாமுனி ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு சென்று உன்னுடைய தவத்தை  அங்கு சென்று நடத்து என்று சொல்லிவிட்டு அவர் மறைந்தார். அங்கு நெடுங்காலம் பைரவரே நோக்கிய, அவரின் தவத்தின் பலனாக சிவாபெருமான், சனி பகவான் முன் தோன்றி சனியின் பினிகளை அழித்து, புத்துயிர்க்  கொடுத்தார். அந்த பெருமை வாய்ந்த அந்த பைரவர் அமைவிடம் இருப்பது புலமைக்  கவியான மாணிக்கவாசகர் பிறந்த ஊரான திருவாதவூர்., இது நமது தென் தமிழகத்தில் உள்ள மதுரை அருகே உள்ளது. அத்தைகைய சிறப்பு வாய்ந்த ஊரில் உள்ள சிவஆலயத்திற்கு ஒரு முறை  சனிப்பெயர்ச்சிக்காலத்தில் சென்று வழிபட்டு வந்தாலே  நிச்சயம் நமது சோதனைகளில் இருந்து விடுபடலாம்''.  இதை செய்ய இயலாதவர்கள் உங்கள் ஊரில் இருக்கும் சிவன் கோயிலில் உள்ள பைரவரை வழிபடவும்.

சிறப்பு வழிபாட்டு முறை :

                        ஒரு சனிக்கிழமை நாளில் ஒரு காப்பர் தட்டை வாங்கிக்கொள்ளவும், அதில் குறைந்த அளவு நல்லெண்ணையை ஊற்றிக்கொள்ளவும்,   பின்  குடும்பத்தில் சனியின் பாதிப்பில் உள்ள இராசிக்கரார் தனது முகத்தைப் முதலில்  பார்க்கவும், அதை அதற்குப்  பிறகு குடும்பத்தார்  ஒவ்வொருவரும்  அதில் தங்கள் முகத்தைப் பார்த்த முடித்து பின், அந்த எண்ணையை ஒரு பைரவரின் முன் உள்ள எரியும் தீபத்தின் முன் ஊற்றிவிடவும்.  இப்படியாக தொடர்ந்து எட்டு வாரம் செய்தீர்களாயின் முழுமையான நன்மையை, முன்னேற்றத்தையும் எட்ட முடியும்.
இதை யாரும் உங்கள் உறனவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

இந்த செய்தியை பகிர்ந்திட்ட ஆன்மீகககடல்
  ஐயா. சகஸ்ரவடுவகர் அவர்களுக்கு எனது கோடி நன்றிகள்

ram1994

Posts : 71
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum