Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


ஆன்மீக வாழ்வில் பெற்றோர்

View previous topic View next topic Go down

ஆன்மீக வாழ்வில் பெற்றோர்

Post by ram1994 on Sun Mar 08, 2015 12:22 pm

நம் உடலை கொடுத்தவர்களின் சாபம் நம்மை தாக்கியுள்ளவரை நம் உடலில் தெய்வம் வந்து அமராது . தெய்வ அருளும் கிடைக்காது . நம் மனம் தூய்மையானதேயானாலும் இதை புரிந்துகொள்ளாத நம் உடலின் பெற்றோர் சபிப்பாரேயானால் உடல் சாபமடையும். சாபமடைந்த உடலில் இறைவன் பார்வைபடாது .

இதற்கு தீர்வு பெற்றவரையும் முன்னோரையும் சமாதானம் செய்ய வேண்டும். சாபமிட்ட பின் அவர்கள் இறந்திருந்தால் அவர்களுக்கு திதி, தர்ப்பணம் இவைகளை முறையாக தொடர்ந்து செய்து வர வேண்டும். அக்காலத்தில் ஞானியர்கள் தன் குருகுல பயிற்சியை தொடங்கும் முன்னரே உறவுகளிடம் பந்தத்தை விடுவித்துக்கொள்ள தீட்சை பெற்று வெளியேறுவார்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதற்கு அவசியம் எதற்கு எனில் கால சூழலில் பெற்றோர் சபிக்க நேர்ந்தால் தெய்வ சக்தி இழக்க நேரிடும். அதை தடுத்துக்கொள்ளவே முன்பே தீட்சை பெற்றுவிடுவார்கள்.

இன்றைக்கு அந்த முறையை யாரும் கையாள்வதில்லை. எனவே சாபம் பெற்ற உடலோடு ஆன்மிக பயிற்சியில் ஈடுபடும்போது இந்த உடலில் உள்ள சாபம் மேலும் வலிமை பெற்று நம்மை இம்சை செய்யும். எனவே தோல்வி என்பது ஆன்மிக பாதையில் எப்பொழுதும் இல்லை. ஆனால் பல தடைகள் உண்டு. அந்த தடைகளை தாங்க முடியாமல் விலகுபவர்கள் தான் ஏராளம் பேர் உள்ளனர்.


ram1994

Posts : 71
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum