Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


குண்டலினியும் தமிழ் மொழியும் -3

Go down

குண்டலினியும் தமிழ் மொழியும் -3

Post by ram1994 on Sun Dec 14, 2014 7:41 am

குண்டலினி சக்கரங்கள் :-

மூலாதாரம் :-

மூலாதாரச் சக்கரமானது பிறப்பு உறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ளது. அது இடை, பிங்கலை, சுழுமுனை என்கிற மூன்று நாடிகள் சேரும் இடத்தில் உள்ளது. இன்னும் துல்லியமாக சொல்வதானால் ஆசனத்திற்கு இரண்டு விரற்கிடை மேலும், பிறப்பு உறுப்புக்கு இரு விரற்கிடை கீழும் உள்ள நான்கு விரற்கிடை அளவுள்ள இடத்திலேயே மூலாதார சக்கரம் இருக்கின்றது.

உடலில் இருக்கும் மற்றச் சக்கரங்களைத் தாங்குவதால் இதனை ஆதார சக்கரம் என்கின்றனர். அதாவது மற்றச் சக்கரங்களுக்கு தேவையான சக்தியைத் தரக் கூடிய குண்டலினி இச்சக்கரத்தில் தான் சுருண்டு படுத்துள்ளது. இச்சக்கரத்தில் இருந்து நான்கு முக்கிய நாடிகள் வெளிக் கிளம்புகின்றன. அவை தாமரையின் நான்கு இதழ்கள் போல் தோற்றமளிக்கும். ஒவ்வொரு நாடியின் அசைவினால் ஏற்படும் சப்தங்கள் "வ ஸ ச ஷ" என்ற எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன.

இச்சகக்கரத்தின் மத்தியிலுள்ள யோனிக்கு “காமம்”என்று பெயர். அதையே சித்தர்கள் தொழுகிறார்கள். இங்குதான் குண்டலினி தூங்குவது போல் அசைவற்றுக் கிடக்கிறது. இச்சக்கரத்தின் அதிதேவன் வினாயகர், அதிதேவதை டாகினி/தாகினி என்று குறிப்பிடப்படுகிறது. இந்த மூலாதார சக்கரத்தின் பீஜ மந்திரமாக "லம்" என்பது குறிப்பிடப்படுகின்றது.

பஞ்சபூதங்களில் ஒன்றான பூமி இந்த் சக்கரத்தின் மூலக்கூறாக கூறப் படுகிறது. சிறுநீரகம் தொடர்புடைய உறுப்பாக கூறப்படுகிறது.

குருவருளின் துனையோடும், வழிகாட்டுதலோடும் தனிமையான இடத்தில் அமர்ந்து மூலாதார சக்கரத்தை மனதில் நிறுத்தி மூல மந்திரத்தை உருவேற்றிட குண்டலினி விழித்துக் கொள்ளும். இதனை தன் உணர்வுகளால் மட்டுமே அறிய முடியும். மூலாதாரத்தில் வெப்பம் உருவாவது, மூலாதாரத்தில் பரபரவென எதோவொன்று ஊறும் உணர்வு, உடல் புல்லரித்தல் போன்ற அனுபவம் ஏற்ப்படும்.

சுவாதிஷ்டானம்:-

மூலாதாரத்திற்கு மேலே இருக்கும் இரண்டாவது சக்கரம் சுவாதிஷ்டானம். நமது பிறப்பு உறுப்பிற்கு மேலே இது இருக்கிறதாம். அதாவது மூலாதார சக்கரத்தில் இருந்து நான்கு விரற்கடை அளவு மேலே இருப்பதாக கூறியிருக்கின்றனர். இந்த சக்கரமானது பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம" என்னும் எழுத்துகளில் ஒன்றான "ந" என்னும் எழுத்தையும்,அதன் தத்துவத்தையும் விளக்குவதாக அமைகின்றது.

இச்சக்கரத்தினின்று ஆறுமுக்கிய நாடிகள் வெளிக் கிளம்புகின்றன. அவை தாமரையின் ஆறு இதழ்கள் போல் உருவகப் படுத்தி இருக்கின்றனர். ஒவ்வொரு நாடியின் அசைவினால் ஏற்படும் சப்தங்கள் "ஸ, ஹ, ம், ய, ர, ல" என்ற எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன. இதன் மையத்தில் வளைந்த பிறைச் சந்திரன் ஒன்றும் குறிக்கப் படுகிறது.

சுவாதிஷ்டானத்தின் அதிதேவன் பிரம்ம தேவர். அதிதேவதை ராகிணி/சாகிணி. பஞ்ச பூதங்களில் ஒன்றான நீர் இதன் மூலக் கூறாக கூறப்பட்டிருக்கிறது. சுவாதிஷ்டானமானது நமது பிறப்பு உறுப்புகள், கருப்பை, குடல் ஆகிய உறுப்புகளுக்கு தொடர்புடையதாம்.

சுவாதிஷ்டானத்திற்கான மூல மந்திரம் “வம்” என்பதாகும். சுவாதிஷ்டானத்தை மனதில் இருத்தி மூலமந்திரத்தை உருவேற்றி வர குண்டலினி இந்த மையத்தை அடையும். இது விடாத தொடர் முயற்சி மற்றும் பயிற்சியினால் மட்டுமே சாத்தியமாகும்.

சித்தர்கள் இந்த சக்கரங்கள் ஒவ்வொன்றையும் ஆணின் அம்சமாகவே கூறியிருக்கின்றனர். குண்டலினி சக்தியை பெண் அம்சமாக அதாவது வாலையின் அம்சமாய் உருவகிக்ன்றனர். இந்த சக்கரத்தின் வழியே குண்டலினி சக்தி பாயும் போது அவை பூரணத்துவம் அடைந்து மலர்வதே சித்தியடைதல் எனப் படுகிறது.

இந்த சக்கரம் மலர்வதால் நமது சுய கட்டுப்பாட்டின் தீவிரம் தூண்டப் பட்டு விழிப்புணர்வு நிலை மிளிரும். நமது எண்ணம், செயல், சிந்தனை சார்ந்த விஷயங்களின் மீதான மேம்பட்ட பிடிப்புணர்வுக்கு இந்த சக்கரம் தூண்டப் படுவது அவசியமாகிறது.

மணிபூரகச் சக்கரம் :-

தாயின் வயிற்றில் இருந்து பிறந்த உடன் நம்முடைய உடலில் ஒரு முடிச்சு இடப் படுகிறது. அது தொப்புள் கொடியாகும். இந்த உடல் உருவாகி, உயிராகத் தேவையான பிராணன் இந்த கொடியின் வழியேதான் நமக்குள் அடைக்கப் படுகிறது என சித்தர் பெருமக்கள் கூறுகின்றனர். இவ்வாறு அடைக்கப் பட்ட பிராணன் தொப்புளைச் சுற்றி குடி கொண்டிருப்பதாக குறிப்பிடுகின்றனர்.

இந்த சக்தி மையத்தையே நாம் மணிப்பூரகம் என்கிறோம். இது சுழிமுனை நாடியில் அமைந்திருக்கிறது. இது நமது வயிறு, சிறுகுடல், மண்ணீரல், கல்லீரல் போன்ற உறுப்புகளுடன் தொடர்புடையதாக கூறப் படுகிறது. இதன் மூலக்கூறு நெருப்பு ஆகும். மணிப்பூரகத்தில் தகித்துக் கொண்டிருக்கும் இந்த நெருப்பு மங்கி அணையும் போதுதான் நம் உடல் நோய்வாய்ப் பட்டு பலவீனம் அடைந்து பின்னர் உயிர் பிரிவதாகவும் ஒரு கருத்தாக்கம் கூறப்பட்டிருக்கிறது.

இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற பத்து யோக நாடிகள் கிளம்புகின்றன. இதன் அசைவுகளால் ஏற்படும் சப்தங்களை டட, ணத, தத, தந, பப என்ற எழுத்துக்களால் குறிப்பிடுகின்றனர். மணிப்பூரகத்தின் அதிதேவன் விஷ்ணு, அதிதேவதை லக்குமி/லாகிணி. இதற்கான மூல மந்திரம் “ரம்” மணிப்பூரக சக்கரத்தின் நடுவே முக்கோண வடிவம் ஒன்று உள்ளது. இது நெருப்பினை அடையாளப் படுத்துகிறது. இந்த சக்கரமானது “சிவயநம” என்னும் எழுத்துக்களில் ஒன்றான “ம்” என்பதன் தத்துவத்தை விளக்குவதாக அமைந்திருக்கிறது.

மணிப்பூரகத்தை மனதில் இருத்தி, இதன் மூல மந்திரத்தினை உருவேற்ற சுவாதிஷ்டானத்திலிருந்து குண்டலினியானது எழும்பி மணிப்பூரகத்தை வந்தடையுமாம். இது மிகக் கடுமையான பயிற்சி மற்றும் முயற்சியினால் மட்டுமே சாத்தியமாகும்.

முறையான பயிற்சி மற்றும் அனுபவம் வாய்ந்த குருவின் வழிகாட்டுதல் இல்லையெனில் இந்த நிலையை தாண்டுவது மிகக் கடினம். ஏனெனில் முறையற்ற பயிற்சி உடலில் தேவையற்ற பக்க விளைவுகளை உருவாக்கிடும். இதை என்னுடைய சொந்த அனுபவத்திலும் உணர்ந்திருக்கிறேன். எனவே தக்க வழிகாட்டுதலுடன் பயில வேண்டுகிறேன். இதனை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டாலும் சரிதான்.

அனாகதம் :-

அநாகதம் என்றால் உருவமற்ற அல்லது உருவகிக்க இயலாத ஒலி என்பதாகும்.இந்த ஆதார மையமானது நமது கழுத்திற்கு கீழே இதயத்திற்கும், நுரையீரலுக்கும் நடுவில் சுழிமுனை நாடியில் அமைந்திருக்கிறது.

இந்த அனாகத சக்கரம் இதயத்தோடு தொடர்புடையதாக கூறப் படுகிறது. இதன் மூலக்கூறு காற்று. அதிதேவன் ருத்ரன், அதிதேவதை காகினி. இதன் மூல மந்திரம் “யம்” என்பதாகும். இந்த சக்கரமானது பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம" என்னும் எழுத்துகளில் ஒன்றான "சி" என்னும் எழுத்தையும் அதன் தத்துவத்தையும் விளக்குவதாக அமைகின்றது.

இந்த சக்கரத்தில் இருந்து பன்னிரெண்டு யோக நாடிகள் தாமரை இதழ் போல வெளிக் கிளம்புகின்றன. இவற்றின் அசைவுகளால் உண்டாகும் சப்தங்களை சித்தர் பெருமக்கள் பின் வரும் எழுத்துக்களால் குறிக்கின்றனர். அவை சங, கக, கக, டட, ஞஜ, ஜச என்பதாகும். சக்கரத்தின் மையத்தில் சப்த பிரம்மத்தின் நாதமான, அனாகத சப்தம் கேட்கும்.

அனாகத சக்கர இடத்தை மனதில் இருத்தி மூல மந்திரத்தை தொடர்ந்து உருவேற்றி வர மணிப்புரக சக்கரத்திலிருந்து குண்டலினி எழும்பி, அனாகதம் வந்தடையும். இந்த சித்தி சில நாட்களிலும் வாய்க்கும், சமயங்களில் சில வருடங்கள் கூட ஆகலாம். இது முழுக்க சாதகனின் பொறுமை மற்றும் கவனக் குவிப்பை பொறுத்தது.

மூலாதார சக்கரத்தில் இருந்து எழுப்பப் பட்ட குண்டலினியானது அனாகத சக்கரத்தை வந்தடையும் போது அதற்கு “அக்கினி குண்டலினி” என்று பெயராகிறது. இப்படி அனாகத சக்கரம் மலர்ந்த நிலையில், சாதகனின் உள்ளத்தில் கருணை, அன்பு, இரக்கம் போன்ற சாத்வீக குணங்கள் மேம்படும். படைப்பாற்றலின் ரகசியமும் புரியவரும்.

விசுத்தி :-

இந்த சக்தி ஆதார மையமானது நமது தொண்டையின் அடிப்பாகத்தில் சுழுமுனை நாடியில் அமைந்து இருப்பதாக குறிப்பிடுகின்றனர். நமது குரல்வளை, மூச்சுக் குழாய், தையராய்டு சுரப்பிகள், நுரையீரல், கைகள் போன்ற உறுப்புகளுடன் விசுத்தி சக்கரம் தொடர்புடையதாக குறிப்பிடப் படுகிறது.

பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம" என்னும் எழுத்துகளில் ஒன்றான "வ" என்னும் எழுத்தையும், அதன் தத்துவத்தையும் விசுத்தி சக்கரம் விளக்குவதாக அமைகின்றது. இச்சக்கரத்தின் அதிதேவன் சதாசிவன், அதி தேவதை சாகினி. பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாசம் இதன் மூலக்கூறு. இதன் மூல மந்திரம் “ஹம்” எனப்படுகிறது.

இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற பதினாறு யோக நாடிகள் கிளம்புகின்றன. அவற்றின் அசைவுகளால் ஏற்படும் சப்தங்களை லுரூ, ருஊ, வஈ, இஆ, அஅ, அம்ஔ, ஓஐ, ஏலூ என்ற எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன. இந்த தாமரை இதழ்களின் எண்ணிக்கையில் ஒரு சூட்சுமம் அடங்கி இருக்கிறது.

இந்த சக்கர இடத்தை மனதில் நிறுத்தி, மூல மந்திரத்தினை உருவேற்றி வர அனாகத சக்கரத்தில் நிலை கொண்டிருக்கும் அக்கினி குண்டலினியானது மேலெழும்பி விசுத்தி சக்கரம் வந்தடையும். இந்த தியானத்தினை “ஆகாச தாரணை” என்கின்றனர் சித்தர் பெருமக்கள்.

இந்த சக்கரம் மலர்வதன் மூலம் தீமையை உருவாக்கும் அல்லது விளைவிக்கும் எண்ணங்கள், உணர்வுகள் எல்லாம் சாதகனை விட்டு நீங்கிடும். இதனால் எதனையும் விருப்பு வெறுப்போ அல்லது பற்றுதலோ இல்லாது சாட்சி நிலையில் இருந்து கவனிக்க முடியும். நான் என்கிற அகந்தை அழிந்து அன்பும், கருணையும் மிளிர்ந்தவனாகிடுவான் என்கின்றனர்.

இந்த ஐந்து சக்கரங்களும் ஆகாச தத்துவ ஞானம் என்ற வகையில் அடங்கும்.

ஆக்ஞா :-

இந்த சக்கரம் நமது புருவ மத்திக்கு நேராக மூளையில் அமைந்திருப்பதாக குறிப்பிடப் படுகிறது. இன்னும் சரியாக சொல்வதெனில் நமது நெற்றியில் உள்ள பள்ள முடிச்சுக்கு இனையாக இருக்கிறது. இதற்குத் 'திரிகூடம்" என்றும் பெயர். இந்த ஆக்ஞா சக்கரமும் மற்ற சக்கரங்களைப் போல சுழுமுனை நாடியில் அமைந்துள்ளது.

பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம" என்னும் எழுத்துகளில் ஒன்றான "ய" என்னும் எழுத்தையும் அதன் தத்துவத்தையும் விளக்குவதாக இது அமைகின்றது. இதன் மூலக்கூறு நெருப்பு. கண்கள், நெற்றி போன்றவை தொடர்புடைய உறுப்புகளாகும்.

அக்ஞா சக்கரத்தில் இரண்டு தாமரை இதழ்களை போல் இருபக்கமும் எதிரெதிரே இரண்டு யோக நாடிகள் உள்ளன. இவற்றை சூரிய சந்திர அம்சமாக உருவகம் செய்திருக்கின்றனர். இதன் அசைவுகளால் ஏற்படும் சப்தங்களை ஹ, ள என்ற எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன

இந்த சக்கரத்தின் அதிதேவன் பரமசிவன், அதி தேவதை வாகினி. மூல மந்திரம் "ஓம்". அக்ஞா சக்கர இடத்தை மனதில் நிறுத்தி, மூல மந்திரத்தை உருவேற்றி வர விசுத்தி சக்கரத்தில் இருக்கும் குண்டலினியானது மேலேறி அக்ஞா சக்கரத்தை வந்தடையும்.

ஆக்ஞா சக்கரம் மலர்வதையே நெற்றி கண் திறப்பதாக பொதுவில் குறிப்பிடுகின்றனர். இத்தகைய மலர்ச்சி நிலையில் சாதகனின் கவனக்குவிப்பு, விழிப்புணர்வு, நினைவாற்றல் போன்றவை பல மடங்கு அதிகரிக்கும். வாழ்வின் ஞானத்தை எல்லாம் தன்னகத்தே ஈர்த்துக் கொண்ட உயரிய நிலை இது.

துரியம் :-


மூலாதாரத்தில் இருந்து விழித்தெழுந்த குண்டலினி அனாகத சக்கரத்தை அடையும் போது அதனை அக்னி குண்டலினி என்றும், அனாகதத்தில் இருந்து எழுந்து மேலேறி ஆக்ஞா சக்கரத்தை மலர்த்திய நிலையில் அதனை சூரிய குண்டலினி என்றும், ஆக்ஞா சக்கரத்தை கடந்து துரியத்தை நோக்கி பயணிக்கும் போது அதனை சந்திர குண்டலினி என்றும், துரியம் மலர்ந்த நிலையில் அதனை துரிய குண்டலினி என்றும் அழைக்கின்றனர்.

ஆக்ஞா சக்கரத்தில் இருந்து எட்டு விரற்கடை மேலே நமது தலையின் உச்சியில் இந்த சக்தி ஆதார மையம் அமைந்திருக்கிறது. நமது மூளை இதற்கு தொடர்பான உறுப்பாக கூறப்பட்டிருக்கிறது.இந்த சக்கரமானது ஆயிரம் இதழ்களைக் கொண்ட தாமரை மலரை போன்றது என்கின்றனர்.அதாவது ஆயிரம் யோக நாடிகள் இந்த சக்கரத்தில் இருந்து வெளிக் கிளம்புகின்றன.

ஆக்ஞா சக்கரத்தில் இருந்து துரிய நிலைக்கு குண்டலினியை எழுப்புவது என்பது குண்டலினி யோகத்தின் மிக உயரிய செயல்பாடு. இதற்கென பிரத்யேக பயிற்சிகள் கூறப் பட்டிருக்கின்றன. அவ்வாறு உயர்த்தப் பட்ட சந்திர குண்டலினி மலர்த்திய துரியசக்கரம் தரும் அனுபவத்தை நம் போன்ற சாமான்யர்களின் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. பரவச நிலை என்பதே நமது ஆகக் கூடிய வ்ருணனையாக இருக்கும்.

கவனத்தை குவித்து, அந்த கவனத்தையே கவனிக்கிற பயிற்சியின் உச்சத்தில் அந்த கவனமே கரைந்து போய்விட்டால் நம்முடைய விழிப்பு நிலை, கனவு நிலை, முழுமை நிலை என்கிற மூன்றும் ஒன்றில் ஒன்றாய் குவிந்து, கரைந்து போகிற நான்காவது பரவச நிலை. இந்த நிலையில் தானே தேடுகிறவனாகவும், தானே தேடலாகவும், தானே தேடு பொருளாகவும் இருப்பதையே துரிய நிலை அல்லது சமாதி நிலையாக சித்தர் பெருமக்கள் குறிப்பிடுகின்றனர்.

ram1994

Posts : 71
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum