Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


குண்டலினியும் தமிழ் மொழியும் -2

Go down

குண்டலினியும் தமிழ் மொழியும் -2

Post by ram1994 on Sun Dec 14, 2014 7:17 am

நமக்குள் உறைந்திருக்கும் குண்டலினியை விழித்தெழச் செய்ய நான்கு வழி வகைகளை நமது முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். அவை கரும யோகம், பக்தி யோகம், ஞான யோகம், கிரியா யோகம் எனப்படும். இவை ஒவ்வொன்றும் தனித்துவமான வழிவகைகள். ஒவ்வொருவரின் உடல் மற்றும் மனப் பக்குவத்திற்கு ஏற்ப தெரிந்தெடுத்து பழகலாம்.

தன்னை உணர ஆரம்பிப்பதே இந்த குண்டலினி யோகத்தின் முதல் நிலை. இதை நாம் பலவிதமாக புரிந்து கொண்டிருக்கிறோம். கண்ணாடியில் முகம் பார்த்து, மேனியை பராமரிப்பதையும், நோய் வாய்ப்பட்டால் அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதையுமே தன்னை உணர்தல் என்பதாக பலரும், தனக்கும், தன் சுற்றத்துக்கும் தேவையானவைகளை சேகரித்து வைப்பது, அதனை பாதுகாப்பது போன்றவைகளையே தன்னை உணர்தல் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். இவை எல்லாமே உடல் அல்லது புறம் சார்ந்த கவனிப்புகள் அல்லது அறிதல்கள்.

நமது உடலின் அடி நாதமாய் ஓடிடும் மூச்சுக் காற்றை நம்மில் எத்தனை பேர் கவனித்திருப்போம். உண்மையில் தன்னை அறிதல் என்பதே நமக்குள் ஓடிடும் மூச்சினை கவனிக்க ஆரம்பிப்பதில்தான் துவங்குகிறது. தானாய் உள்ளே வருகிறது, அதுவாகவே வெளியே போகிறது என தொடர்ந்து நடக்கிற செயல்தானே என நாம் அலட்சியப் படுத்திவிடுகிறோம். உண்மையில் நமது மகத்துவமே இந்த மூச்சில்தான் அடங்கி இருக்கிறது.

சுவாசம் எனப்படும் இந்த மூச்சு ஒரு சீரான தாளகதியில் நமக்குள் நடந்து கொண்டிருக்கிறது. கவனிக்க ஆரம்பித்தால் மட்டுமே அது புரிய ஆரம்பிக்கும். சாதாரண நிலையில் நடக்கும் சுவாசத்திற்கும், உடல் அல்லது மனம் வருந்த ஒரு செயலை செய்யும் போது விடும் சுவாசத்திற்கும் வித்தியாசம் இருப்பதை நாம் அறிவோம். இந்த தாள கதியை கவனிக்க ஆரம்பித்தலே முதல் நிலை. சுவாசத்தின் இந்த லயத்தை கவனிக்க கவனிக்க நமக்குள் மாற்றங்களை உணர முடியும்.

சித்தர் பெருமக்கள் நான்கு வகையான சுவாச முறைகள் இருப்பதாக கூறுகின்றனர். அவை உயர் சுவாசம், மத்திம சுவாசம், கீழ் சுவாசம், முழுமையான சுவாசம். இது பற்றி விரிவாக தனி பதிவொன்றில் பார்ப்போம். இவற்றுள் நமது சுவாசம் எத்தகையது என்பதை உணர்ந்து அவற்றை முழுமையான சுவாசத்திற்கு உயர்த்திட வேண்டும். இப்போது ப்ராணயாமம் பற்றிய நினைவுகள் உங்களுக்கு வரலாம்.

முழுமையான சுவாசத்தை அறிந்து தெளிந்து பின் அதனை கவனிக்க அதன் லயம் புலப்படும், அந்த லயத்தினை கவனிக்க மனம் அதில் ஒடுங்கும். கவனச்சிதறலுடன் இருந்த மனம் குவியும். சுவாசத்தில் மனம் ஒடுங்க ஒடுங்க உண்டாகும் மாற்றங்களே குண்டலினி பயிற்சியின் ஆரம்பநிலைக்கு உணர்த்தும்.

குண்டலினி பயிற்சியை செய்ய துவங்கும் சாதகன் முதலில் தனிமையான இடத்தை தெரிவு செய்தல் வேண்டும். தனி அறையாக இருந்தால் அமைதியாக அமர்ந்து செய்ய வசதியாக இருக்கும். தோட்டம், புல்தரை, வனப்பகுதி, நீர் நிலைகளை அண்டிய பகுதிகள், பூஞ்செடிகள் மற்றும் ஜீவசமாதி உள்ள இடங்களும் சிறப்பானதே.

அடுத்து ஆசனங்கள். இந்த பயிற்சியை செய்திட எல்லா வகையான ஆசனங்களை பயிற்சி செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. தளர்வாகவும், வசதியாகவும் அமர்ந்து செய்யக் கூடிய ஆசனங்களை தெரிந்து பயன்படுத்துவது அவசியம். சாதாரணமாய் நாம் உட்காரும் முறையான பத்மாசனம் போதுமானது. உட்காருவது கடினமாய் உணர்பவர்கள் சுகாசனத்தில் அமர்ந்து செய்யலாம்.

ram1994

Posts : 71
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum